உணவில் இஞ்சியை அதிகம் சேர்ப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்துகள் உறுதி!
இஞ்சி என்பது சூப்கள் அல்லது கறிகளுக்கு சுவை சேர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலாப் பொருளாகும். இஞ்சியில் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றது.
இது குமட்டல், அஜீரனம், வீக்கம், உடல் பருமன் மற்றும் வலிமிகுந்த மாதவிடாய் ஆகியவற்றைப் போக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது போல் இஞ்சியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
அதிகமாக இஞ்சி சாப்பிடலாமா?
இஞ்சியின் மிகப்பெரிய பக்க விளைவு என்னவென்றால், அது உணவு மற்றும் மலம் குடல் வழியாகச் செல்வதை துரிதப்படுத்துகிறது, இது அமைதியின்மை மற்றும் பலவீனத்தை அதிகரிக்கின்றது. எனவே, உணவில் இஞ்சியைச் சேர்க்கத் திட்டமிடும்போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
உடலில் ஏற்கனவே சில ஆரோக்கிய பிரச்சினைகள் இருந்தால், இஞ்சியை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஒரு நிபுணரிடம் கேட்பது நல்லது.
ஆய்வு தகவல்களின் பிரகாரம் தினமும் 5 கிராமுக்கு மேல் இஞ்சியை உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.
நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்
இஞ்சி அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது அதில் அழற்சி எதிர்ப்பு கூறுகள் நிறைந்துள்ளன, இந்த பண்புகள் இரத்தத்தை மெலிதாக்குவதற்கும் வேலை செய்கின்றன.
இஞ்சி பிளேட்லெட்டுகள் உறைவதைத் தடுக்கலாம் என்றும் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது, ஆனால் இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், இரத்தம் மெலிந்து போகும் அபாயம் காணப்படுகின்றது.
இஞ்சி பொதுவாக செரிமானத்திற்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் அதிக அளவில் எடுத்துக் கொண்டால், வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க கூடும்.
மேலும் அதிகமாக இஞ்சி சாப்பிடுவது சிலருக்கு நெஞ்செரிச்சல், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த வயிறு உள்ளவர்களுக்கு இது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இஞ்சி இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுடன் வினைபுரியும். நீரிழிவு மருந்துகளுடன் இஞ்சியை உட்கொள்வது இரத்த சர்க்கரையை அதிகமாகக் குறைத்து, இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தும்.
சிலருக்கு இஞ்சி சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படலாம். இதன் அறிகுறிகள் லேசான சொறி முதல் சுவாசிப்பதில் சிரமம் போன்றவையாக அறியப்படுகின்றது. இவ்வாறான பிரச்சினை இருப்பவர்கள் இஞ்சியை உணவில் சேர்க்கும் போது அலட்சியமாக இருக்க கூடாது.
இஞ்சி சாப்பிட்ட பிறகு ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டால், உடனடியாக இஞ்சியை உட்கொள்வதை நிறுத்திவிட்டு மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
மேலும் மிக முக்கியமாக கர்ப்ப காலத்தில் முன்னெச்சரிக்கை அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் காலை நோய் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்த இஞ்சியை பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அதன் அளவு குறைவாக இருக்க வேண்டும்.
அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் அறிக்கையின்படி, அதிகப்படியான இஞ்சி நுகர்வானது கருச்சிதைவை ஏற்படுக்கூடும். மேலும் கருவின் வளர்ச்சியையும் பெரிதும் பாதிக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
