புகழ்பெற்ற இயக்குனர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்
புகழ்பெற்ற நாடக நடிகரும், இயக்குனருமான அமீர் ராசா ஹுசைன்(86) உடல்நலக்குறைவால் காலமானார்.
நடிகர் அமீர் ராசா ஹுசைன்
இன்றைய காலத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களில் உதவியுடன் சரித்திரப்படங்களை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்த முடியும் நிலையில், ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு முன்னே மேடை நாடகளின் மூலம் இந்த பிரம்மாண்டங்களை கொண்டு சென்றவர் தான் அமீர் ராசா ஹுசைன்.
தற்போது 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரபாஸ் நடிப்பில் ராமாயணத்தை மையமாக வைத்து ஆதி புருஷ் புடத்தை எடுத்துள்ள நிலையில், இந்த பிரம்மாண்ட காவியத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேடை நாடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் தான் இந்த அமீர்.
ஆம் கடந்த 1994-ம் ஆண்டு முதன்முதலில் லெஜண்ட் ஆஃப் ராம் என்கிற பெயரில் ராமாயணத்தை நாடகமாக அரங்கேற்றினார். இதன் கடைசி நிகழ்ச்சி ஜனாதிபதி அப்துல் கலாம் முன்னிலையில் நடத்தப்பட்டது.
மேலும் அமீர் ராசா கார்கில் போரை மையமாக வைத்து தி பிஃப்டி டே வார் என்கிற நாடகத்தை நடத்தி உள்ளார். அரசியலில் பணியாற்றிய இவர் கடந்த 2013ம் ஆண்டு டெல்லி பாஜக துணைத் தலைவராக இருந்ததுடன், மோடியை விமர்சித்துவிட்டு அக்கட்சியிலிருந்து வெளியேறினார்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அமீர் ராசா ஹுசைன் ஜூன் 3-ந் தேதி காலமானார். அவரின் மறைவு நாடகத்துறைக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
மறைந்த அமீர் ராசா ஹுசைனுக்கு விராத் தல்வார் என்கிற மனைவியும், சுனிஸ் சுகைனா மற்றும் குலாம் அலி என இரு பிள்ளைகளும் உள்ளனர்.