மேடையில் வைத்து தனுஷ் மகனை கலாய்த்த டிடி.. கையெடுத்து கூம்பிட்ட லிங்கா
திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ் மகனை டிடி மேடையில் இருந்து கலாய்க்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் தனுஷ்
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ்.
இவர், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிப்படங்களிலும் கதாநாயகராக நடித்து வருகிறார்.
நடிகர், இயக்குநர், பாடகர் இப்படி பன்முக திறமைக் கொண்ட தனுஷ், ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
ஆனாலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர். என்ன தான் விவாகரத்து வாங்கி பிரிந்தாலும் தங்களின் குழந்தைகளுக்காக இணைய வேண்டிய நிலையில் சேர்ந்து இருக்கிறார்கள்.
கையெடுத்து கூம்பிட்ட லிங்கா
இந்த நிலையில், நடிகர் தனுஷ் மகன் லிங்கா இட்லி கடை திரைப்பட விழாவில் கலந்து கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அப்போது மேடையில் தொகுப்பாளினியாக இருந்த டிடி, “ லிங்கா போன் வைச்சிருக்கீங்களா? என்னை ஒரு காணொளி அல்லது புகைப்படம் எடுத்து தர முடியுமா?” என கேட்க, அதற்கு லிங்கா கையெடுத்து கூம்பிட்டு போதும் எனக் கூறுகிறார்.
இதனை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய மகனை மேடைக்கு அழைத்து நடனமும் ஆடியிருப்பார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. காணொளியை பார்த்த பலரும்,“சம்பவம் பண்ணீட்டீங்க டிடி” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |