இப்படியும் ஒரு நோயா? இந்த நோய் உள்ளவர்களுக்கு பயம் என்ற உணர்வே இருக்காது!
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பயம் என்பது நிச்சயம் இருக்கும். எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் ஏதாவது விடயங்களுக்கு பயப்படுவது இயல்பு தான்.
பயம் என்பது ஒரு பெரும்பாலும் ஒரு எதிர்மறை குணமான கருதப்பட்டாலும், மனிதர்களுக்க பாதுகாப்பு உணர்வை உறுதி செய்வதில் பயம் பெரும் பங்கு வகிக்கின்றது.
நம்மை ஆபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ளவும் விழிப்புடன் வைத்திருக்கவும் பய உணர்வு இன்றியமையாதது.
பயம் என்ற உணர்வு இல்லாத ஒரு நிலையில் மனிதர்கள் எப்படியிருப்பார்கள் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? அப்படி சிந்திப்பது சற்று வேடிக்கையாக இருந்தாலும், பயம் உணர்வு முற்றிலும் இல்லாமல் இருப்பது உண்மையில் ஒரு அரிய நோயாக அறியப்படுகின்றது.
இந்த நோயின் பெயர் மற்றும் அறிகுறிகள் என்ன என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பயத்தை உணருவது என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு உயிர்வாழும் தந்திரமாகும். ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு எதற்கும் பயப்படாத ஒரு அரிய நிலை உள்ளது. பயம் இல்லாமல் அவர்கள் எப்படி வாழ்க்கையை வாழ்கிறார்கள்?
இப்படியும் ஒரு நோயா?
குஷிங்ஸ் எனப்படும் மன அழுத்த நோய்க்குறியால் ஏற்படும் பதட்டத்தைக் குறைக்க தனது அட்ரீனல் சுரப்பிகளை அகற்றிய பிரிட்டிஷ் மனிதரான ஜோர்டி செர்னிக்கின் என்ற நபருக்கு பயம் என்ற உணர்வே இல்லாமல் போயுள்ளது.
இந்த நோய் ஏற்பட்டால் உடலில் மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நோய்க்கு சிகிச்சையாக அவரது அட்ரீனல் சுரப்பிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதன் பின்னர், ஜோர்டியின் பய உணர்வு முற்றிலும் இல்லாமல் போயுள்ளது.
2012 ஆம் ஆண்டு, அவர் டிஸ்னிலேண்டில் ஒரு ரோலர் கோஸ்டரில் சவாரி செய்து, விமானத்தில் இருந்து குதித்து, ஒரு கயிற்றைப் பயன்படுத்தி மிகப்பெரிய உயரத்திலிருந்து கீழே இறங்கிய போதும் பயத்தை உணரவே இல்லை. அதன் போது அவரது இதயத்துடிப்பு சாதாரண வேகத்தில் இருந்ததுடன், துளியும் பதட்டம் இல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நோய் நிலையின் பெயர் உர்பாக்-வைத்தே ஆகும் (லிபாய்டு புரோட்டினோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது) இந்த நோயுடன் வாழும் எவருக்கும் பயம் என்ற உணர்வு முற்றிலும் நீங்கிவிடும், இது மிகவும் அரிதான ஒரு மரபணு நிலை, இதுவரை சுமார் 400 பேருக்கு மட்டுமே இது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயத்தை உணரக்கூடிய மூளையின் பகுதியான அமிக்டாலா எனப்படும் பகுதி சரியாகச் செயல்படாததால், பய உணர்வை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |