கின்னஸ் சாதனை படைத்த தங்க உடை - எடை எவ்வளவு தெரியுமா?
உலகின் மிகவும் எடை கூடிய தங்க உடை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதை பற்றிய முழு விபரத்தை பார்க்கலாம்.
கின்னஸ் சாதனை உடை
நாம் நமது வாழ்நாட்களில் எவ்வளவு உடைகளை உடுத்திருப்போம். ஆனால் தங்கத்திலான உடையை யாரும் அணிவதற்கு வாய்ப்புக்கள் கிடைத்திருக்காது.
பொதுவாக உடைகள் என்றால் எவ்வளவு கெட்டிரியல்களில் இருக்கும். அது போல 10 எடை கொண்ட ஒரு உடை என்றால் அது ஆச்சரியம் தான்.
இந்த ஆடையை, சவுதி அரேபியாவைச் சேர்ந்த நகை வியாபாரியான அல் ரோமைசான் கோல்ட் அண்ட் ஜூவல்லரி நிறுவனம் வடிவமைத்துள்ளது.
‘துபாய் டிரஸ்’ என்று பெயரிடப்பட்ட இந்த ஆடை, ஷார்ஜா வாட்ச் அண்ட் ஜூவல்லரி எக்ஸ்போவில் அபாரமான கைவினை மற்றும் ஆடம்பரத்துடன் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆடையின் விலை
21 காரட் தங்கத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த உடை, 10.0812 கிலோ கிராம் எடை கொண்டது. இதன் கணக்கிடப்பட்ட மதிப்பு சுமார் 4.6 மில்லியன் திர்ஹாம் (ரூ. 11 கோடி) ஆகும்.
இந்த உடையின் முக்கிய கூறுகள் அல் ரோமைசான் கோல்டின் கூற்றுப்படி, இந்த உடை நான்கு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது.
398 கிராம் எடையுள்ள தங்க தலைப்பாகை
8,810.60 கிராம் எடையுள்ள சிறப்பு நெக்லஸ்
134.1 கிராம் எடையுள்ள காதணிகள்
738.5 கிராம் தங்கத் துண்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு கூறும் நுட்பமான கைவினை மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தங்கமும், நகைகளும் இணைந்து, எமிராட்டியின் கலாச்சார பாரம்பரியக் கதையை சொல்லும்விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பாளர்கள் வரலாற்று அடையாளங்களை நவீன அழகியலுடன் நுட்பமாகக் கலந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |