எனக்கு மாரடைப்பா? கூலாக வந்து பதில் கொடுத்த நடிகர் விக்ரம்
கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்ரம், தனது உடல்நிலை குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு கூலாக பதிலடி கொடுத்தார்.
நடிகர் விக்ரம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், நடிகர் சியான் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, இயக்குனர் அஜய் ஞானமுத்து, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், நடிகர் துருவ் விக்ரம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் அவர் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், நேற்று மாஸாக கலந்து கொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எனக்கா நெஞ்சுவலி?
தனது உடல்நிலை குறித்து விக்ரம் பேசுகையில், “சும்மா நெஞ்சுல கைவச்சா கூட ஹார்ட் அட்டாக்னு சொல்லிடுறாங்க. எனக்கு ஒன்னும் இல்ல, நல்லா இருக்கேன்.
நான் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனதும் கச்சா முச்சானு ஏதேதோ எழுதிருந்தாங்க. நல்லா இருந்துச்சு. சிலர் என்னுடைய முகத்தை, நோயாளியின் முகத்தோடு வைத்து போட்டோஷாப் செய்திருந்ததையும் பார்த்தேன்... நன்றாகவே இருந்தது.
20 வயதில் நான் விபத்தில் சிக்கியபோது என் காலை இழக்க வேண்டிய நிலை இருந்தது. அதிலிருந்தே மீண்டு வந்துட்டேன். எவ்ளவோ பாத்துட்டோம், இதெல்லாம் ஒன்னுமே இல்லை.
எனது குடும்பத்தினரும், எனது ரசிகர்களும், எனது நண்பர்களும் எனக்கு ஆதரவாக இருக்கும் வரை எனக்கும் எந்த பயமும் இல்லை. நான் எப்பொழுதும் சினிமாவுக்காகவே வாழ்வேன், சினிமா தான் என் உயிர்” என நெகிழ்ச்சி உடன் பேசினார் விக்ரம்.

