70 வயதில் சொத்தை குவித்து வைத்திருக்கும் மெகா ஸ்டார்.. ஒற்றை வாரிசுக்காக இவ்வளவா?
எந்தவித சலனமும் இல்லாமல் குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சீரஞ்சிவியின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி
தமிழ் சினிமா போல் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருப்பவர் தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் ரீமேக் படங்களுக்கு பெயர் போன நடிகர்.
இவர் நேரடியாக நடித்த திரைப்படங்கள் படுத்தோல்வியடைந்த காரணத்தினால் ரீமேக் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
அதிலும் சிரஞ்சீவிக்கு ஆக்ஷன், சென்டிமென்ட் படங்கள் சிறந்த ஒரு இடத்தை தெலுங்கு சினிமாவில் எடுத்து கொடுத்தது.
இதற்கிடையில் சிரஞ்சீவி நடிகர் ராமலிங்கய்யாவின் சகோதரி சுரேகாவை 1980ம் ஆண்டு மணந்தார். இந்த தம்பதியருக்கு ராம் சரண், ஸ்ரீஜா, சுஷ்மிதா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சொத்து மதிப்பு எவ்வளவு?
இந்த நிலையில், இன்றைய தினம் நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய 70 ஆவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியிருக்கிறார்.
இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் அவரின் சொத்து மதிப்பு விவரங்களும் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், சிரஞ்சீவியிடம் ரூ.11 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், ரூ.90 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர், ரூ.1.50 கோடி மதிப்புள்ள டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கூடுதலாக, அவர் ரூ.2.75 கோடி விலையில் Mercedes-Benz G63 AMG உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளன.
ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் 25 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான பங்களாவும் உள்ளது. இதன் விலை 30 கோடி இருக்கும் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒரு படத்துக்கு 60 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
இவரிடம் ஒட்டுமொத்தமாக 1650 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறுகின்றனர். அதில் அவருடைய அன்பு மகன் ராம்சரணிடம் தனியாக 1100 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |



