பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி: நடந்தது என்ன?
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் தோல்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நந்தமூரி பாலகிருஷ்ணா தற்போது 'அகண்டா' படத்தில் கவனம் செலுத்தி வருவதோடு, அடுத்ததாக கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள மற்றொரு படத்திலும் நடிக்கவிருக்கின்றார்.
இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பாலகிருஷ்ணா அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆறு மாதகாலமாக இவருக்கு தோள்பட்டையில் வலி இருந்து வந்த நிலையில், இதற்கான நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தற்போது நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 4 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்பு பாலகிருஷ்ணா நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.