நான் இறந்துவிட்டால்... 2வது மனைவிக்கு நடிகர் பாலா சொன்னது என்ன தெரியுமா?
அன்பு,காதல் கிசு கிசு போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பாலா.
அதிலும் குறிப்பாக இவர் நடித்த அன்பு திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது. இவர் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்திலும் நடித்தார்.
இவர் தற்போது உடல் நலம் சரியில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிய, எலிசபெத் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அவர்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். சிகிச்சை பெற்றுவரும் அவர், தனது மனைவிக்கு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்தாவது, “விரைவில் தனக்கு ஆபரேஷன் ஒன்று நடக்க இருப்பதாகவும் ஒருவேளை அந்த ஆபரேஷனில் தான் தோல்வியடைந்துவிட்டால், தனது மனைவி இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தனக்காக பிரார்த்தனை செய்த தனது ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவானது, தற்போது வைரலாகி வருகின்றது.