அசோக் செல்வனுடன் நெருக்கமாக இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
நடிகர் அசோக் திருமணத்திற்கு இன்னும் சில காலங்களே இருக்கும் நிலையில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார்.
நடிகர் அசோக் செல்வன்
தமிழ் சினிமா வாய்ப்புக்காக பல நிறுவனங்கள் ஏறி இறங்கி தற்போது கதாநாயகராக ஜொலிப்பவர் தான் நடிகர் அசோக் செல்வன்.
இவர் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் சரி நடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிக்க வந்தவராம்.
இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'சூது கவ்வும்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சில படங்கள் இவருக்கு தோல்வியை கொடுத்தாலும் 'ஓ மை கடவுளே', 'மன்மத லீலை' போன்ற படங்கள் அசோக் செல்வனுக்கு வெற்றியை கொடுத்தது.
நெருக்கமாக இருக்கும் பெண் யார் தெரியுமா?
இந்த நிலையில் சினிமாவில் சாதித்து விட்டார் தற்போது திருமணத்திற்கு தயாராகி அந்த வேலைகள் நடந்து கொண்டு வருகின்றது.
அந்த வகையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனுக்கும், அசோக் செல்வனுக்கும் அடுத்த மாதம் 13 ஆம் தேதி, திருமணம் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் வேலைகள் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. இப்போது ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த யார் இவர்? என கேட்ட போது, இவர் தான் என்னுடைய சகோதரி என பதிலளித்துள்ளாராம்.
அசோக் செல்வனின் சகோதரியும் பார்ப்பதற்கு தென்னிந்திய நடிகை போல் தான் இருக்கிறார். அத்துடன் சகோதரியை பார்த்த இணையவாசிகள், திருமண வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |