உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழன்! யார் இந்த அசோக் எல்லுசாமி?
டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் அசோக் எல்லுசாமி.
அதாவது, ஆட்டோபைலட் தொழில்நுட்பம் குறித்து ஆராயும் ஆட்டோ பைலட் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள முதல் ஊழியர் இவரே.
இதன்மூலம் உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளார் அசோக் எல்லுசாமி.
Elon on Teslas Autopilot team: Ashok is actually the head of Autopilot engineering. Andrej is director of AI; People often give me too much credit & give Andrej too much credit. The Tesla Autopilot AI team is extremely talented. Some of the smartest people in the world. @elonmusk pic.twitter.com/a6vJ64aphG
— Sawyer Merritt (@SawyerMerritt) December 29, 2021
யார் இவர்?
விழுப்புரத்தை சேர்ந்த எல்லுசாமி என்பவரின் மகன் அசோக், சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பியல் பிரிவில் 2009-ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் Carnegie Mellon University-ல் Robotics Systems Development பிரிவில் எம்.எஸ். பட்டம் பெற்றார்.
இதனையடுத்து Fox Vegan Electronic Laboratory மற்றும் வாப்கோ (WABCO) வாகன கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
இதன்பின்னர் 2014 முதல் தற்போது வரை டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், 2017-ல் சீனியர் ஸ்டாப் (staff) மென்பொறியாளர், 2019-ல் ஆட்டோபைலட் சாப்ட்வேர் குழுவின் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து, தற்போது ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.