ஈழத்தமிழ் பெண்ணை ஏமாற்றிய விவகாரம்... நடிகர் ஆர்யா போலீசாரிடம் ஆஜர்!
ஜெர்மனியைச் சேர்ந்த ஈழத் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, 71 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, நடிகர் ஆர்யா மீது, இளம்பெண் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, வித்ஜாவின் வழக்கறிஞரான சென்னையைச் சேர்ந்த ராஜபாண்டியன் இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் வித்ஜாவை திருமணம் செய்து கொள்வதாக ஆர்யா உறுதியளித்ததாகவும், மேற்கூறிய தொகையை அவரிடமிருந்து வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதன் அடிப்படியில், ஆர்யா இன்று மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி புகார் தொடர்பாக விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.