திங்கட்கிழமை என்றாலே உங்களுக்கு பயமா? மகிழ்சியாக எதிர்கொள்ள எளிய வழிகள்
பொதுவாகவே பாடசாலைக்கு செல்லும் குழந்தைகளாக இருந்தாலும் சரி வேலைக்கு செல்லும் பெரியவர்களாக இருந்தாலும் சனி, ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை எடுத்துவிட்டு திங்கட்கிழமை மீண்டும் தங்களின் வழக்கமான நிகழ்வுகளுக்கு திரும்புவது மிகவும் சவாலான விடயமாகும்.
ஒவ்வொருவரும் இந்த உணர்வு தங்களுக்கு மட்டும் ஏற்படுவதாகவே நினைக்கின்றார்கள்.ஆனால் பெரும்பாலான மனிதர்களிடையே இந்த திங்கட்கிழமை பயம் இருக்கத்தான் செய்கின்றது.
இந்த உணர்வில் முழுமையான பயம் இன்றி ஒரு வகையான எரிச்சல் உணர்வும் கலந்து காணப்படுகின்றது.
நீங்களும் திங்கட்கிழமை மீது சற்று எரிச்சல் உணர்வு கொண்டவராக இருந்தால், திங்கட்கிழமையை மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் எதிர்கொள்வதற்கு எவ்வாறான பழக்கங்களை கடைப்பிடிக்கலாம் என இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
திங்கட்கிழமையை மகிழ்ச்சியாக்கும் வழிகள்
ஞாயிற்று கிழமை மாலையிலேயே திங்களன்று என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள், என்பதையும் திட்டமிட்டு வைத்துக்கொள்வதால் திங்கட்கிழமையை மகிழ்ச்சியாகவும் பதற்றம் இன்றியும் கழிக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமை இரவில் 7-8 மணி நேரம் ஆழ்ந்து உறங்குவது மிகவும் முக்கியம். இது, மறு நாள் நல்ல மன நிலையுடன் உங்கள் நாளை ஆரம்பிக்க பெரிதும் துணைப்புரியும்.
திங்கட்கிழமையில் மனதுக்கு மிகுவும் நெருக்கமாக விடயத்துடன் நாளை ஆரைம்பிக்க பழகிக்கொள்ள வேண்டும். அது ஒரு கப் காபியாக இருக்கலாம், அல்லது பிடித்த காலை உணவு அல்லது பிடித்த ஆடையாக கூட இருக்கலாம்.
திங்களன்று நீங்கள் செய்ய வேண்டிய விடயங்களை சரியாக திட்டமிட்டு நேரத்திற்கு ஏற்ப பிரித்து எமுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் அந்த வேலைகளை முடித்த பின்னர் அதை டிக் செய்துக்கொள்ளும் பழக்கம் மற்றும் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளும் பழக்கம் ஆகியன உங்கள் திங்கட் கிழமையை வெற்றிகரமாக கழிக்க உதவும்.
‘இந்த நாள் நன்றாக இருக்கும்’ என்ற எண்ணத்துடன் உங்களை மிகவும் அழகாக காட்டும் ஆடையை அணிந்துக்கொள்ளுங்கள் நமக்கு நாமே அழகாக தெரிந்தால் புதிய உட்சாகமும் தன்னம்பிக்கையும் தானாக பிறக்கும்.
இந்த விடயங்களை தொடர்ந்து பின்பற்றினால் திங்கட்கிழமையை மீது இருக்கும் எரிச்சல் உணர்வு மறைந்து புதிய ஆர்வம் பிறக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |