அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்... அழகைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
நடிகர் அரவிந்த் சாமியின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அரவிந்த் சாமி
தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டங்களில் இளம்பெண்களின் கனவு கண்ணனாக வலம்வந்தவர் தான் நடிகர் அரவிந்த் சாமி.
சினிமாவிற்குள் வந்த ஆரம்பத்தில் அதிகமான படங்களில் நடித்த இவருக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.
இவர் மருத்துவராக ஆக நினைத்த நிலையில், மாடலிங் துறையில் ஈடுபட்டார். பின்பு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர், முதன்முதலாக மணி ரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்திருந்தார்.
2005ம் ஆண்டு பெரிய நிறுவனம் ஒன்றிற்கு அதிபதியாக இருந்த இவர், பெரிய விபத்து ஒன்றில் சிக்கி, முதுகுத்தண்டில் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டு ஒரு பகுதி செயலிழந்து போயுள்ளது.
பின்பு உடல் எடை அதிகரித்து ஆளே மாறிய இவர், பின்பு 15 கிலே எடையைக் குறைத்து மீண்டும் சினிமாவிற்குள் தனி ஒருவன் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார்.
இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், தற்போது கார்த்தியுடன் மெய்யழகன் படத்தில் நடித்து வருகிறார்.
அரவிந்த் சாமிக்கு, ஆதிரா என்ற 28 வயதில் மகளும், ருத்ரா என்று 24 வயதில் மகனும் உள்ளனர். ஆதிரா சாமி, பிரபல சமையல் கலைஞராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தருணத்தில் மகள் ஆதிராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |