கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை! விபத்து நடந்தது எப்படி?
சைத்தான் படத்தில் நடித்த பிரபல நடிகை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை அருந்ததி நாயர்
திருவனந்தபுரத்தில் வசித்தி வரும் நடிகை அருந்ததி நாயர், மலையாளி ஆவார். இவர் கடந்த 2014ம் ஆண்டு பொங்கி எழு மனோகரா என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் சைத்தான், விமலுடன் கன்னி ராசி, சிரிஷ் சரவணனுடன் பிஸ்தா, விதார்த்துடன் ஆயிரம் பொற்காசுகள், சமுத்திரகனியுடன் யாவரும் வல்லவரே என பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் ஒற்றைக்கொரு காமுகன் என்ற படத்தில் ஷைன் டாம் சாக்கோவின் காதலியாக நடித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய நடிகை
கடந்த வாரம் அருந்ததி தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரம் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
தற்போது அருந்ததி கவலைக்கிடமான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இவரது மருத்துவ செலவிற்கு நிதியுதவி கேட்டு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.