முரட்டு சிங்கிள் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பன்முக நடிகரும், இயக்குனருமான, எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் எஸ்.ஜே சூர்யா
தமிழ் சினிமா துறையில் துணை இயக்குனராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர், இயக்குனர் பாண்டிய ராஜன், பாரதி ராஜா, வசந்த் உள்ளிட்ட பல இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
ஆசை, உல்லாசம், போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாட்டியபோது, நடிகர் அஜித்துடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, தான் எழுதி வைத்திருந்த வாலி படத்தின் கதையை அவரிடம் கூற வாய்ப்பு கிடைத்துள்ளது.
கதையை கேட்டதுமே அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டதாம். உடனடியாக ஓகே சொன்னார். பின்னர், இது எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படம் என்பதால் தயாரிப்பாளரையும் அஜித்தே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவும் தன்னுடைய முதல் படத்தை பெரிய நடிகர் - நடிகைகளை வைத்து இயக்கியது மட்டும் இன்றி, அஜித்துக்கு வாலி திரைப்படம் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது.இப்படத்தின் வெற்றியால், அஜித் எஸ்.ஜே.சூர்யாவுக்கு புதிய கார் ஒன்றையும் பரிசாக வழங்கியிருந்தார்.
அதே போல் தான் வாங்கிய முதல் படத்தின் அட்வான்சை வைத்து, தன்னுடன் பணியாற்றிய துணை இயக்குனர்கள் என 14 பேருக்கு எஸ்.ஜே.சூர்யா பைக் வாங்கி கொடுத்து தனது வெற்றியை பகிர்ந்தார்.
வாலியை தொடர்ந்து விஜய்யை வைத்து குஷி, படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, நியூ படத்தில் இவரே ஹீரோவாகவும் மாறினார். இதுவும் பெரிய ஹிட் கொடுத்தது.
இதனை தொடர்ந்து அன்பே ஆரூயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி நடித்த எஸ்ஜே சூர்யா அந்த படங்களின் தோல்வியால் படம் இயக்குவதை விட்டுவிட்டு முழு நேர நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
இவர் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த 'இறைவி' திரைப்படம் எஸ்.ஜே.சூர்யாவை சிறந்த நடிகராக பார்க்க செய்தது. இதை தொடர்ந்து, ஸ்பைடர், மெர்சல், மாநாடு, தொடக்கம் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா XX படம் வரை தாறுமாராக நடித்து தள்ளிவிட்டார்.
ஒரு படத்திற்கு 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கும் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு வருடத்திற்கு 20 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். சென்னையில் சொந்தமாக இவருக்கு 2 வீடுகள் மற்றும் பிற இடங்களிலும் சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளார்.
BMW Z4 Roadster Melbourne Red சொகுசு கார், ஆடி, உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்துள்ளார். எனவே இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 100 கோடி யை அண்மித்துள்து.
தற்போது 55 வயது ஆகும் நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது வரை முரட்டு சிங்கிளாகவே வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா தனது சகோதரி பெயரிலும் சில சொத்துக்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |