பிரைவேட் ஜெட், லம்போகினி கார்.. பத்ம பூஷன் விருதை தன்வசப்படுத்திய அஜித் குமாரின் சொத்து மதிப்பு
பத்ம பூஷன் விருதை தன்வசப்படுத்திய நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் அஜித்குமார்.
இவர், சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருந்து வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் அவர் 3ம் இடம் பிடித்து இருந்தார். இதனால் அவருக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பின்னர் நேற்றைய தினம் மத்திய அரசு, நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்து இருக்கிறது.
Art பிரிவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் 3வது உயரிய விருது இதுவாகும். அத்துடன், இன்னும் சில நாட்களில் அஜித் நடிப்பில் தயாராகி இருக்கும் “விடாமுயற்சி” திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
சொத்து மதிப்பு விவரங்கள்
இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், ஒரு படத்தில் நடிக்க அஜித் குமார் ரூ100 கோடி வாங்கி வந்த நிலையில், துணிவு படத்திற்கு பிறகு அவரின் சம்பளம் ரூ.150 கோடியாக அதிகரித்துள்ளது.
ரூ 25 கோடியில் சொந்தமாக பிரைவேட் ஜெட் மற்றும் கார் பிரியரான அஜித்திடம் Porsche GT3 RS, Ferrari SF90, BMW 740Li, Mercedes-Benz 350 GLS, 34 கோடி ரூபாய் மதிப்புள்ள Lamborghini சொகுசு கார்களும் உள்ளன.
அத்துடன் அஜித்திற்கு சென்னையில் பல கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றும், அண்மையில் துபாயில் வீடு ஒன்றும் வாங்கியுள்ளார். அஜித் குமாரின் மனைவி ஷாலினி படங்களில் ஹீரோயினாக நடித்த சமயத்தில் ஒரு படத்திற்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்று வந்தார்.
குழந்தை நட்சத்திரமாக, கதாநாயகியாக பல படத்தில் நடித்துள்ளார். இவரின் சொத்தையும் சேர்த்து அஜித் குமாரின் சொத்து மதிப்பு ரூ.350 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |