நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி
பத்மபூஷன் விருது வாங்கிய நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.
இவர், நடிப்பில் கடைசியாக "Good Bad ugly" திரைப்படம் வெளியாகி வெற்றிநடைப்போட்டுக் கொண்டிருக்கிறது.
அஜித் வழக்கமான நடிகர்கள் போல் அல்லாமல் திரைப்படங்களில் நடிப்பதுடன் கார் ரேசிலும் ஈடுபாடு மிக்கவராக இருக்கிறார்.
சமீபத்தில் பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ரேசிலும் பங்கேற்று, கார் ரேஸ் பயிற்சியின் போது சிறிய அளவிலான விபத்திலும் சிக்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படாமல் உயிர்தப்பினார்.
இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் பத்மபூஷன் விருது வாங்குவதற்காக குடும்பத்தினர் டெல்லி சென்றார். இதன்போது எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவலின்படி, அஜித்குமார் அவரது உடல் நல பரிசோதனைக்காக அப்பல்லோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றைய தினம் சென்னை திரும்பிய அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிய போது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலர் அவருக்கு என்ன மாதிரியான உடல் நலக்குறைவு என தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள்.
அதன் பின்னரே உடல் நல பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |