ஆளே மாறிப்போன நடிகர்.. இளசுகளை கட்டிப்போட்ட அப்பாஸ் இப்போ எப்படி இருக்காரு பாருங்க
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பெரிய நடிகராக வலம் வந்த நடிகர் அப்பாஸ் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை கண்டு இணையவாசிகள் மிரண்டு போயுள்ளனர்.
நடிகர் அப்பாஸ்
கடந்த 2000ம் காலங்களில் வெளிவந்த திரைப்படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கதாப்பாத்திரமாகவும் நடித்து வந்தவர் தான் நடிகர் அப்பாஸ்.
இவர், ஐஸ்வர்யா ராய், சினேகா உள்ளிட்ட பல முக்கிய நடிகைகளுடன் நடித்திருக்கிறார். கடந்த 1996ல் ஆரம்பித்த இவரது சினிமா பயணம், 2015 வரை சென்றது.
இடையில் சில தோல்விகள், வெற்றிகள் கிடைத்தாலும் ஒரு கட்டத்தில் அவரது மார்கட் இறங்கி விட்டது. சினிமாவில் பெரிய நடிகராக வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
அவ்வப்போது நேர்காணல்களை மட்டும் வழங்கி வருகிறார்.
அப்பாஸா இது?
இந்த நிலையில், அப்பாஸின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
திருமணத்திற்கு பின்னர், நியூசிலாந்துக்கு வேலைக்காக சென்று அங்கு டாக்ஸி ட்ரைவராகவும், ஷூட்டிங் வேலைகளையும் பார்த்து வருகிறார்.
அப்பாஸின் மனைவி ஈரும் ஹுசைன் கான் திரையுலகில் ஆக்டிவாக இருக்கும் ஆடை வடிவமைப்பாளராவார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
அப்பாஸ், சில நாட்களாக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக இருந்து வருகிறார்.
சமீப காலமாக, நேர்காணல்களில் கலந்து கொண்ட இவர், பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். பார்ப்பதற்கு விஜய் போன்று இருப்பதாகவும், ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அத்துடன் “இது அப்பாஸுன் ரீ- என்றியா? ” என்றும் கருத்துக்கள் பரவலாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |