நாவிற்கு இதமான மீன் ஊறுகாய் செய்ய தெரியுமா? அசைவ பிரியர்களுக்கான சூப்பர் ரெசிபி!
அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் மீன் ஊறுகாய் எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 மேஜைக்கரண்டி
வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 1 இஞ்சி - ஒரு சிறிய துண்டு
வினிகர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஊறுகாயிற்கு தேவையான மீன்களை எடுத்து சுத்தம் செய்து பெட்டி வடிவில் வெட்டி வைக்கவும்.
பின்னர் இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீனுக்கு மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக மீன்களுக்கு படும்படி கலந்து விடவும்.
இதனை தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உப்பு கலந்து வைத்திருக்கும் மீன்களை போட்டு நன்றாக வறுத்தெடுக்கவும்.
அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகிய பொருட்களை போட்டு நன்றாக கிளரவும்.
எண்ணெயில் இவையெல்லாம் இருக்கும் போது மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் மீன்களையும் சேர்க்கவும்.
சரியாக 5 நிமிடங்கள் மீனை வேக விட்டு கப் வினிகர் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் வைத்து விட்டு இறக்கினால் சுவையான மீன் ஊறுகாய் தயார்!
ஊறுகாயை காற்று போகாத பாட்டிலில் போட்டு அடைத்து வைத்து தேவையான நேரம் பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |