பைக்கில் சாகசம் செய்து சீன் போட்ட நபர் - அடுத்து நடந்த விபரீதம்!
பைக்கில் சாகசம் செய்து சீன் போட்ட நபர் விபத்தில் சிக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சாகசத்தால் விபத்தில் சிக்கிய நபர்
காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள், நடுரோட்டில் பாதுகாப்பின்றி பைக்கில் சாசகம் செய்யாதீர்கள் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால், சிலர் இதையெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லை.
சிலர் உயிரையும் பொருட்படுத்தாமல் பைக்கில் சாகசம் செய்து கை, கால்களை உடைத்துக் கொள்வார்கள். இன்னும் சிலருக்கு உயிருக்கே ஆபத்தாகி போய் முடியும். இவர்களுக்கு மட்டும் விபத்து நேர்ந்தால் பாரவாயில்லை. ஆனால், பாவம்... ஒன்றே தெரியாமல் நடந்து வருபவர்களோ அல்லது வாகனம் ஓட்டி வருபவர்களுக்கோ இவர்களால் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.
அதேபோலதான், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,
பைக்கில் ஒருவர் சாகசம் செய்து கொண்டு வருகிறார். அப்போது தெருவிலிருந்து கார் வந்து கொண்டிருக்கவே, சாகசம் செய்து வந்த நபர் அந்த கார் மீது மோதி குப்புற கீழே விழுகிறார். இந்த விபத்தில் அந்த கார் மிகவும் சேதமடைகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த நபரை வறுத்தெடுத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
On notice there is no deception pic.twitter.com/VBw92mItOZ
— CCTV IDIOTS (@cctvidiots) May 22, 2023