தற்கொலைக்கு சென்ற அனுயா.. இதுவரை முடியாத சர்ச்சை- மனமுடைந்து போன நடிகையின் கதை
“நான் தற்கொலை செய்ய சென்ற போது என்னுடைய பெற்றோர்கள் தக்க சமயத்தில் வந்தனர்..” நடிகர் அனுயா பேசியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுயா பகவத்
தமிழ் சினிமாவில் கடந்த 2009ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான “சிவா மனசுல சக்தி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அனுயா பகவத்.
இதனை தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சினிமாவில் டாப் நடிகையாக வலம்வருவார் என எதிர்பார்த்த வேலையில், சுசி லீக்ஸ் வாயிலாக அனுயாவின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலானது.
இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆனாலும் இது தொடர்பான சர்ச்சைகள் தற்போது வரை எழுந்த வண்ணம் உள்ளது.
மேலும், அனுயா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால் இவருக்கு பெரியளவு ரசிகர்கள் இல்லாத காரணத்தினால் முதல் வாரமே வெளியேற்றப்பட்டார்.
தற்கொலைக்கான காரணம்
இந்த நிலையில் சமிபத்தில் பேட்டியொன்றில் புகைப்படம் குறித்தும், அதற்கு பின்னரான வாழ்க்கை குறித்தும் கேள்வியெழுப்பட்டது.
அதில், “ மார்ஃபிங் புகைப்படம் வெளியாகிய போது, நான் இறந்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டேன். அப்போது என்னுடைய பெற்றோர்கள் வந்து தைரியம் கூறினார்கள்.
மேலும் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சரி ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் மட்டும் போட மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்...” என உருக்கமாக பேசியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து நண்பன் பட காட்சியில் ஒரு சந்தர்ப்பத்தில் விஜய்யை அறைவது போன்ற காட்சியொன்று வைக்கபட்டிருக்கும். அப்படியான சந்தர்பத்தில் இயக்குநர் சங்கர் பேச்சை தட்ட முடியாமல் நடித்தாகவும் அவர் கூறினார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |