40 வயதில் பெண் குழந்தையை தத்தெடுத்த நடிகை! குவியும் வாழ்த்துக்கள்
பெண் குழந்தையை தத்தெடுத்துள்ள நடிகை அபிராமிக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
நடிகை அபிராமி
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் நடிகை அபிராமி. இவர் தமிழில் ‘வானவில்’ படத்தில் முதல்முறையாக அறிமுகமானார்.
இதனையடுத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். பிரபு, அர்ஜூன், கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் அபிராமி.
தமிழில் ‘விருமாண்டி’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘சமுத்திரம்’, ‘சுல்தான்’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல படங்களில் நடித்தார். கமலுடன் நடித்த ‘விருமாண்டி’ படம் அபிராமிக்கு நல்ல பெயரை கொடுத்தது.
இப்படம் வசூல் சாதனையையும் படைத்தது. இதன் பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்து வந்ததால் சேனல்களில் தொகுப்பாளரானார் அபிராமி. கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய நண்பர் ராகுல் என்பவரை திருமணம் செய்தார். தற்போது அபிராமிக்கு 40 வயது ஆகிறது.
பெண் குழந்தையை தத்தெடுத்தார்
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை அபிராமி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், நானும் ராகுலும் கடந்த வருடம் எங்கள் மகளைத் தத்தெடுத்தோம். அது அனைத்து வகையிலும் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகவலை நடிகை அபிராமி, நேற்று அன்னையர் தினத்தில் தெரிவித்தார். அக்குழந்தைக்கு கல்கி என்று பெயர் வைத்துள்ளராம்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து நடிகை அபிராமிக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.