Google-ல் அதிகம் தேடப்பட்ட பிக் பாஸ் பிரபலம்! 19 வயதில் அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா?
இந்தியர்கள் 2022ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடிய நபர்களில் பிக் பாஸ் பிரபலத்தின் பெயர் இருக்கும் தகவல் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசன் தமிழ் பிக் பாஸை போல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இதில், பாடகர் அப்து ரோசிக் கலந்து கொண்டுள்ளார்.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட அப்து ரோசிக்
உருவத்தில் குழந்தை போன்று இருக்கும் ரோசிக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் பிக் பாஸ் மூலம் கிடைத்துவிட்டார்கள்.
பாடகர் அப்து ரோசிக்கிற்கு தற்போது 19 வயதாகிறுது.
இப்படி ஒரு பிரச்சினையா?
சிறுவயதில் அவருக்கு ரிக்கெட்ஸ் பிரச்சனை ஏற்பட்டதாம். ரிக்கெட்ஸ் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்ட எலும்பு நோயாகும். இந்த நோய்க்கு அவருக்கு சிகிச்சை வழங்க தேவையான பணம் குடும்பத்தில் இல்லாமல் போய்விட்டதாம்.
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் ரோசிக்கின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் பிக் பாஸில் கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றார். அவர் பிக் பாஸ் வீட்டில் பாட்டு பாடி அசத்தி வருகிறார். அவரின் குரலுக்கு ரசிகர்கள் அடிமையாகி விட்டனர்.
அதேபேல அவர் நடந்துகொள்ளும் விதம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
இந்நிலையில் தான் 2022ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் அப்து ரோசிக்கிற்கு 7வது இடம் கிடைத்திருக்கிறது.
இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.