மகனின் 16 வயது பிறந்தநாளில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு! வைரலாகும் புகைப்படங்கள்
சமீபகாலமாகவே இணையத்தில் பரவலாக பேசப்படும் விடயங்களில் நடிகர் ரவிமோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விடயம் முக்கிய இடம் வகிக்கின்றது.
தற்போது மகன்களுடன் தனியாக வாழ்ந்துவரும் ஆர்த்தி ரவி மகனின் 16 ஆவது பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து உருக்கமான நீண்ட பதிவுடன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

ரவி மோகன் - ஆர்த்தி ரவி
ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களின் திருணம வாழ்க்கையில் பாடகி கெனிஷாவால் தான் பிரிவு நிகழ்ந்ததாக ஆர்த்தி ரவி குறிப்பிடுகின்றார்.ஆனால் ரவி மோன் தனக்கு உண்டான மரியாதையும், சுதந்திரமும் பறிக்கப்பட்டதால் தான் ஆர்த்தியை பிரிந்ததாக குறிப்பிகின்றார்.

இருப்பினும் ஆர்த்தியை பிரிந்து அவர் தனித்து வாழாமல் பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வந்ததால், ரசிகர்களும் நெட்டிசன்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். ஆர்த்தி ரவிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு காணப்படுகின்றது.
ரவிமோன் கெனிஷாவுடன் சுற்றிதிரிந்து என்ஜாய் செய்யும் புகைப்படங்களையும், காணொளிகளையும் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

பாடகி கெனிஷா சமீபத்தில் ஆர்த்தி ரவி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.ரவி மோகனின் பெண் தோழியென அறியப்படும் பாடகி கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பதிவிட்டுள்ள கருத்துக்களை நீக்கவேண்டும் என்றும் கோரி ஆர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் பாடகி கெனிஷா சமூக வலைத்தளங்களை முடக்குவதாக அறிவித்துவிட்டு சென்னையை விட்டு வெளியேறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் தனது திருமண வாழ்க்கையில் நடந்த பல கொடுமைகள் குறித்து பொது வெளியில் கொட்டி தீர்த்தார். விவாகராத்து கிடைக்கும் வரையில் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.

விவாகரத்து நிலுவையில் இருக்கும் நிலையில், ஆர்த்தி ரவி தனது மூத்த மகன் ஆரவ்வின் 16 ஆவது பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து உருக்கமான பதிவுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |