PPP வைத்து தகனம் செய்யப்பட்ட பாக்கியராஜ் உடல்! நடிகர் பார்த்திபன் விளக்கம்
பாக்கியராஜ் உடல் மீது PPP வைத்து தகனம் செய்யபட்டதை அடுத்து இதன் அர்தம் குறித்து நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் பாக்கியராஜ்
மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் ஜூன் 28 தகனம் செய்யப்பட்டது. நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் 73 வயதில் மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை ஜூன் 27 காலமானார்.
இவருடைய தனித்துவ திரைக்கதைகள் 1980 காலகட்டங்களில் தலை சிறந்த திரைக்கதை மன்னன் என பெயர் பெற்று கொடுத்தது.
இதன் பின்னர் பாரதிராஜாவிடம் உதவியாளராகத் தொடங்கி, சுவரில்லாத சித்திரங்கள் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இந்த நிலையில்பாக்யராஜின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அதன் முன்பு ஒரு பெரிய பேட், பேப்பர், பேனா வைத்து அதில் அன்புடன் உங்கள் பாக்யராஜ் என்று எழுதப்பட்டிருக்கிறது.
அந்த பேட், பேப்பர், பேனா ஏன் என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
கடைசி வரை யாரோ? பாடிய
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 30, 2026
கண்ணதாசனுக்கே காடு வரை தானே?
பாரதிராஜா சாருக்கும் அப்படித்தான் மதுரை காட்டுராடு வரை சென்றேன் -அதுவே விளிம்பு. அதற்கு பின் மண்ணுக்குள் அவர் மட்டும் சென்று விட்டார்.
இன்று என் குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட்நகர் மின் தகனம் வரை ….
எழுதுதட்டை அதில் சில… pic.twitter.com/enXBYGvMPU
பார்தீபன் விளக்கம்
நடிசகர் பார்த்திபன் கடைசி வரை யாரோ? பாடிய கண்ணதாசனுக்கே காடு வரை தானே? பாரதிராஜா சாருக்கும் அப்படித்தான் மதுரை காட்டுராடு வரை சென்றேன் -அதுவே விளிம்பு.
அதற்கு பின் மண்ணுக்குள் அவர் மட்டும் சென்று விட்டார். இன்று என் குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட்நகர் மின் தகனம் வரை …. எழுதுதட்டை அதில் சில வெண்காகிதங்கள் அதில் ‘அன்புடன் உங்கள் பாக்யராஜ்’ கொட்டை எழுத்துக்களில் அவர் இதயப் பகுதியில் நான் வைத்தது ‘கடைசிவரை’ சென்றது.

கால்மாட்டில் தீபம், நெஞ்சில் கற்பூரம் ஏற்றிய பின் அந்தத் தீக்குகை நோக்கிப் பயணம் ஆயுத்தமானது. ஒரு சக முயற்சியாளராக அறிமுகமான பாக்யராஜை குருவாக ஏற்றுக்கொண்டபின், அடிபணிந்தே பணிப்புரிந்தேன்.
தூக்கத்தை பட்டிளி போட்டே பழக்கப்பட்டவனாதலால் சூரியனுடனே கிளம்பி ஆபிஸுக்கு சென்று விடுவேன். பாக்யராஜ் சாரின் அறையை சுத்தப்படுத்தி அவர் அமரும் இடத்தில் Pad paper pen -ஐ தயார் நிலையில் வைப்பேன்.
இப்போதும் அந்த P P P அவரது இதயத்திற்குப் பக்கத்தில் வைத்திருக்கிறேன். அது நகர்ந்து அந்த தீப்பிழம்புக்குள்.

அஸ்தி பெற காத்திருக்கும் சாந்தனு பக்கத்தில் ஆறுதல் சொல்ல வந்தமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் திரு கண்ணன் ரவியிடம் “ அப்போது நீங்கள் செய்தது (ராவணக்கோட்டம் தயாரித்தது)பத்தாது, இப்போது சாந்தனுவை வைத்து படம் எடுங்கள்” என்றேன்.
அந்த இடத்தில் அதைப் பேசுவது சரியா தவறா என்ற யோசனையை மீறி. பாக்யராஜ் சாருக்கு நன்றி கடனாக சாந்தனுவை வைத்து ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ எடுத்தவன் நான். மீண்டும் சாந்தனு வெற்றி பெற வேண்டுகிறேன்.
திறமையை மீறி வெற்றி மட்டுமே இங்கு கொண்டாடப்படும் ! பூத உடல் சாம்பலானாலும் புகழுடல் நிலைக்கப் போகும் பாக்யராஜ் சார் கடைசியாக யோசித்த படத்தின் பெயர் ‘ மயான கொள்ளை’ என அவரது இன்றைய உதவியாளர் கூறினார்.
Google வழி சொல்லாத இடத்திற்கு சென்று விட்ட குருவின் அஸ்தியை பெஸன்ட் நகர் கடலில் கரைத்துவிட்டு நினைவை மட்டும் சுமந்தபடி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |