படத்தில் மகளாக நடித்தவரை நிஜத்தில் திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகர்
பிரபலமான பொலிவுட் நடிகர்களில் ஒருவர் ஆமீர் கான். இவர் நடிப்பில் கடைசியாக லால் சிங் தத்தா திரைப்படம் வெளிவந்தது.
இந்நிலையில் ஆமீர்கானின் திருமணம் குறித்து சில செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, அவர் தனது மகள் வயதையொத்த ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவர் வேறு யாருமில்லை பொலிவுட் நடிகை ஃபாத்திமா சனா சாயிக் தான். இவர் ஆமீர் கானின் தங்கல் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.
image - the indepentant
இருவரும் தங்கல் திரைப்பட படப்பிலிருந்தே காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.
நடிகர் ஆமீர்கான், கடந்த 1986ஆம் வருடம் ரீனா தத்தா என்பவரை மணந்து கடந்த 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
பின்னர் 2005ஆம் வருடம் கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்து அதிலிருந்தும் 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
நடிகர் ஆமீர் கானுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த திருமண தகவல் எந்தளவுக்கு உண்மையென்று தெரியவில்லை.