ஸ்கூட்டரில் சுற்றியிருந்த பாம்பு! வைரலாகும் வீடியோ காட்சி
வீடு மட்டுமல்லாமல், கார், டூவீலர் போன்ற வாகனங்களில் பாம்புகள் தஞ்சமடையும் சம்பவங்கள் இந்தியாவில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
வைரல் வீடியோ
பாம்புகள் வெப்பமான இடத்தை தேடி தஞ்சமடையும். சுற்றுப்புற சூழல் மிகவும் குளிர்ச்சியாக மாறும்போது, பாம்புகளுக்கு உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.
இந்த காரணத்திற்காக பாம்புகள் மனிதர்கள் வாழும் இடத்திற்கு வருகை தருகின்றது. அந்த வகையில் இன்று இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. வீடியோவின் தொடக்கத்தில், சிலர் நீளமான மரத்தின் கிளையை பயன்படுத்தி ஸ்கூட்டரின் சீட்டை தூக்க முயற்சிக்கிறார்கள்.
சீட்டை திறந்தவுடன் ஸ்கூட்டரின் பெட்ரோல் டேங்கில் சின்ன மலைப்பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தது. இதை பார்த்த இணையவாசிகள் அச்சரியத்தில் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.இந்த சம்பவத்தை தவிர இன்னும் பல சம்பவங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |