இந்த 4 அறிகுறிகள் இருக்கா? உங்க கல்லீரலை பத்திரமா பாத்துகோங்க
நமது உடலில் கல்லீரல் மிகவும் பெரிய மற்றும் முக்கியமான உறுப்பாகும். உடலின் உள் சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பரவலான செயல்பாடுகளை கல்லீரல் கொண்டுள்ளது.
வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன.
இது வயிற்றில் உள்ளது. மேலும் விபரமாக பார்த்தால் இந்த உறுப்பு இரத்தத்தை வடிகட்டுவது, மெட்டபாலிசத்தை பராமரிப்பது, பித்தநீரை உற்பத்தி செய்வது, இரத்த உறைதலுக்கு தேவையான புரோட்டீனை உற்பத்தி செய்வது, வைட்டமின்களை சேமிப்பது போன்றவற்றை செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கவை.
இவ்வளவு முக்கியமான வேலைகளை செய்யும் கல்லீரல் நமது மோசமான உணவுப் பழக்கம், மதுப்பழக்கம், புகைப்பிடிப்பது மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் சேதமடைகின்றன.

ஆனால் சிலருக்கு தெரிவதில்லை. ஒரு வெளி உறுப்பு சேதமடைந்தால் அதை நாம் கண்களால் பார்த்து அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்வோம்.
ஆனால் உள்ளுறுப்புகள் பிரச்சனை என்றால் அதற்கு சில அறிகுறிகள் காட்டுவதை வைத்து மட்டுமே நம்மால் சிகிச்சை பெற முடியும். அப்படி தான் கல்லீரல் பிரச்சனையும். இதை ஆரம்பத்திலே கண்டறிந்து பிரச்சனைக்கு முடிவு அதுவே கல்லீரல் பிரச்சனை முற்றிவிட்டால், பின் சிகிச்சை அளிப்பது சிரமமாகிவிடும்.
எனவே இதற்கான அறிகுறிகள் அறிந்து அதற்கேற்ற முறையில் சிகிச்சை பெற மருத்துவர் ஆரோசனை விடுக்கிறார். இதை பின்வரும் பதிவில் பார்க்கலாம்.

| மஞ்சள் நிற சருமம் | மருத்துவர் கூற்றுப்படி, மஞ்சள் காமாலை அதாவது சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது கல்லீரல் சேதத்தின் மிகவும் முக்கியமான அறிகுறிகளாகும். இதுபோன்ற மாற்றத்தை கண்களிலும், சருமத்திலும் கண்டால், அதை ஒருபோதும் புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என கூறப்படுகின்றது. |
| வீங்கிய வயிறு | வயிற்றுப் பகுதி வீங்கியோ அல்லது மிகுந்த உப்புசத்துடன் இருப்பதையோ உணர்ந்தால், உங்கள் கல்லீரல் சரியாக செயல்படவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையை திரவக் குவிப்பு என்று அழைப்பர். எப்போது கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லையோ, அப்போது வயிறு, கால்கள் போன்ற பகுதிகளில் திரவங்கள் குவியத் தொடங்கி அந்த இடத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும். |
| குமட்டல் மற்றும் வாந்தி | குமட்டல், வாந்தி போன்றவற்றை காரணமில்லாமல் அடிக்கடி சந்தித்தால் மற்றும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தால், அதுவும் இரவு நேரத்தில் அப்படி இருந்தால் அது கல்லீரல் சேதத்தின் எச்சரிக்கை அறிகுறிகளாகும் என மருத்துவர் கூறினார். எனவே இப்படி வாந்தி குமட்டல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. |
| வலது மேல் வயிற்று வலி | வயிற்றின் மேல் பகுதியில் வலித்து கொண்டே இருப்பது அது கல்லீரல் சேதத்தின் மற்றொரு முக்கியமான அறிகுறியாகும். இது ஹெபடைடிஸ் மூலம் ஏற்படலாம். அதாவது கல்லீரல் வீக்கத்தினால் ஏற்படலாம். இது தவிர வைரஸ் தொற்று அல்லது அதிக மது போன்றவற்றாலும் ஏற்படலாம் என மருத்துவர் கூறுகின்றார். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |