300-க்கும் மேற்பட்ட வியாதிகளை குணப்படுத்தும் அற்புத மூலிகை!
Amenorrhoea
Back Pain
Cholestrol
By Kishanthini
பிரண்டையானது வெப்பமான இடங்களில் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். பிரண்டை கொடி வகையைச் சார்ந்தது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், வைட்டமின்-சி, அமிரோன், அமைரின், சிட்டோசிரால், கரோட்டின், குவாட்ராங்குலாரின்-ஏ, குவர்சிடின் போன்ற சத்துக்கள் உள்ளன.
இது உடல் வஜ்ரம் போல் பாதுகாப்பதால் இதற்கு வஜ்ரவல்லி என்ற பெயராலும் அழைக்கப்படுகி்னறது.
300-க்கும் மேற்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தக்கூடிய தன்மை இதற்கு உண்டு என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் இது எந்ததெந்த நோய்களை குணமாக்க உதவுகின்றது என்பதை இங்கே பார்ப்போம்.
- பிரண்டை அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைப்பதோடு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும்.
- இரைப்பையில் ஏற்படும் அலர்ஜி, அஜீரணம், பசியின்மை, குடற்புழு சரி செய்யும்.
- மாதவிடாய் காலங்களில் இடுப்பு வலி, வயிற்று வலி நீங்குவதற்கு உதவுகின்றது.
- உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியைப் பெருக்கும்; மூளை நரம்புகளைப் பலப்படுத்தும்.
- எலும்புகளுக்குச் சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும்
- பிரண்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி உப்பு, புளி, காரம் சேர்ந்து துவையலாக அரைத்துச் சாப்பிடலாம். இதனைச் சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும்.
- மூளை நரம்புகள் பலப்படும். குடலில் உள்ள வாயுவை அகற்றி வெளியேற்றும். குழந்தைகளுக்குப் பிரண்டையைச் சாப்பிடக் கொடுத்த வந்தால் எலும்புகள் பலப்படும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US