ரட்சத பச்சை அனகொண்டாவை லாவகமாக தூக்கிய இளைஞன்! வைரலாகும் காணொளி
இளைஞனொருவர் தன்னை விட இரட்டிப்பு எடை கொண்ட பச்சை நிற அனகொண்டா பாம்பை குழந்தை போல் அசால்ட்டாக தோளில் தூக்கி வைத்திருக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
அமேசான் காடுகளின் அரசனாக வாழும் அனகொண்டாக்கள் உலகின் மிகப்பெரிய பாம்பினங்களில் ஒன்றாக அறியப்படுகின்றது.
இது தொடர்பாக திரைப்படங்களும் ஏராளமாக வெளிவந்துள்ளன. பிரம்மாண்ட தோற்றத்ததால், பீதியை கிளப்பும் அனகொண்டாக்களை பார்த்தால் யாருக்கு தான் பயம் இருக்காது?
ஆனால் அந்த பயத்தையும் மீறி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் அனகொண்டாக்களை பற்றி அறிந்துக்கொள்வதிலும் ஆர்வம் இருப்பது தான் வியப்பான விடயம்.
அந்தவகையில், இளைஞனொருவர் தன்னை விட பல மடங்கு அதிக எடையை கொண்ட பச்சை அனகொண்டா பாம்பை அசால்ட்டாக தூக்கிய பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |