viral video: பட்டப் பகலில் கடைக்குள் துப்பாக்கியுடன் வந்த திருடன்... பெண்ணின் துணிச்சலான செயல்!
பட்டப்பகலில் துப்பாக்கியுடன் கடையொன்றில் புகுந்து திருட முட்பட்ட நபரொருவரை துணிச்சலாக செயற்பட்டு பெண்ணொருவர் போலீசாரிடம் பிடித்துக்கொடுத்துள்ள சம்பம் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
குறித்த்த காணொளியில் ஒரு துப்பாக்கியுடன் வந்த திருடன் கடைக்குள் புகுந்து உள்ளே இருந்த பெண்களை மிரட்ட முயல்கிறார்.
ஆனால் அந்தக் கடையில் இருந்த ஒரு துணிச்சலான பெண், பிற பெண்களை பாதுகாப்பாக வெளியே அனுப்பிட்டு அந்த பெண்ணும் வெளியேறி உடனே கதவுகளை பூட்டி விடுகிறார்.
அதனை தொடர்ந்து திருடன் கதவை திறக்க பலவிதமாக முயற்சி மேற்கொண்டு, துப்பாக்கியால் சுடும் அளவுக்கு பயம் காட்டினாலும் கதவை திறக்க முடியவில்லை.
பின்னர் திருடன் கதவை உடைக்கவும் முயல்கின்றார். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை துப்பாக்கி முனையில் கைது செய்கின்றனர்.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் பிரபலமாக பரவி வருவதுடன் பலரும் அந்த பெண்ணின் துணிச்சலான செயலை பாராட்டி வருகின்றனர்.
Very smart woman! pic.twitter.com/24EIpyPyP2
— The Figen (@TheFigen_) July 15, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |