இறந்தும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கும் ஊடகவியலாளர்!
பிரான்ஸ் ஊடகவியலாளரை முத்தமிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிறப்பு
கடந்த 1848 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி “யுவெஸ் - சலமன்” தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் விக்டர் நோயர். பிரான்ஸ் மக்களின் அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து பிரபல்யமாகியவர் தான் விக்டர் நோயர்.
இவர் அரசியல், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிராக சில சர்ச்சையான கருத்துக்களை கூறியதால் ஊடகவியலாளராக அங்கீகரிக்கப்பட்டவர்.
இதனை தொடர்ந்து கடந்த 1870 ஆம் தனது நெருங்கிய நண்பரின் காதல் கதையை கட்டுரையாக எழுதினார். இந்த கட்டுரையில் வரும் பெண் அரசாங்கத்திலுள்ளவரின் நெருங்கிய உறவு என்பதால் சர்ச்சை எழுந்தது.
இந்த பிரச்சினையில் 1870ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
குழந்தை பாக்கியமா?
இந்த நிலையில், காதலுக்காக உயிரிழந்த விக்டர் நோயரின் சிலை நினைவு சின்னமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கு குறிப்பிட்ட சில செயல்முறைகளை செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என அப்பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
அந்த வகையில், நேயரின் பக்கத்தில் மலர்கள் வைப்பது, அவரின் உதடுகளுக்கு முத்தம் கொடுப்பது, போன்ற செயற்பாடுகளால் இந்த நம்பிக்கை நிறைவேறுவதாக மக்கள் நம்பி வருகிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து மக்கள் குறித்த சிலையை காண வருகை தருகிறார்கள்.
இதன் காரணமாக அந்த சிலையில் குறிப்பிட்ட சில பகுதிகள் தேய்வடைந்து வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.