சிறுமியை தூக்கி தலைகீழாக நிலத்தில் அடிக்கும் கொடூரன்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..
நபர் ஒருவர் மனிதாபிமானமற்று ஒரு குழந்தையை தூக்கி நிலத்தில் அடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுவர் துஷ்பிரயோகம்
தற்போது நமது சமூதாயங்களில் குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் தொடர்பான சட்டங்கள் இருந்தாலும் அதனை பாதுகாப்பதும் கடைபிடிப்பதும் ஒரு சிலர் தான்.
எமது சமூகத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைந்தாலே குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வதற்கு சிறந்த வழியை பெறமுடியும். ஆனால் சமீபத்தில் இதனை மீறும் வகையில் செயற்பட்ட நபரொருவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவில், கேரளாவை சேர்ந்த சுமார் 5 வயது இஸ்லாமிய குழந்தையொருவர் கையில் புத்தகங்கங்களுடன் அழுத படி நின்று கொண்டிருக்கிறார்.
அப்போது அவருக்கெதிர் பக்கத்திலிருந்து வந்த 35 வயது மதிக்கதக்க அபுபக்கர் சித்திக் என்பவர் குழந்தையை தூக்கி நிலத்தில் அடித்துவிட்டு சென்றுள்ளார்.
இதனால் அந்த குழந்தைக்கு எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில் காணப்பட்டாலும், அக்குழந்தை புத்தகங்களை எடுத்து கையில் வைத்துக் கொள்கிறது.
நெட்டிசன்களின் கொந்தளிப்பு
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை Wasim R Khan என்பவர் “இந்த மனித ஓநாயை கடவுள் தண்டிக்க வேண்டும்” என குறிப்பிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இதற்கான நடவடிக்கைகளை தகுந்த அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.