பிக்பாஸ் மேடையை விருது மேடையாக மாற்றிய விஜய் டிவி- யார் யாருக்கு விருது கொடுத்தாங்க தெரியுமா?
பிக் பாஸ் மேடையில் பிரம்மாண்டமாக நடந்த “விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்” நிகழ்வில் விருது வாங்கிய பிரபலங்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி
சமீபக் காலமாக மக்களின் விருப்பமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக விஜய் டிவி இருந்து வருகின்றது.
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
அத்துடன் இந்த தொலைக்காட்சியிலிருந்து வெள்ளித்திரைக்கு வாய்ப்பு தேடி சிலர் சென்றிருக்கிறார்கள். அவர்கள் தற்போது பெரிய பிரபலங்களாக இருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்புக்களை தன்வசமாக வைத்திருக்கும் விஜய் தொலைக்காட்சி வருடம் வருடம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பிரபலகளை பொறுக்கி எடுத்து அவர்களுக்கு பட்டம் கொடுத்து விருது வழங்கும்.
விஜய் டெலிவிஷன் அவார்ட் 2024
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜய் டெலிவிஷன் அவார்ட் 2024 நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

இதில் நாம் சீரியல்களில் பார்க்கும் பல பிரபலங்கள் விருது வாங்கியுள்ளனர்.
இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை பிரபலங்கள் அவர்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார்கள்.
இந்த நிலையில், விஜய் டெலிவிஷன் அவார்ட் 2024 நிகழ்ச்சியில் யாரெல்லாம் விருது வாங்கியுள்ளார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
விருது வாங்கிய பிரபலங்களின் பட்டியல்

- சிறந்த பாட்டி- ரேவதி (சிறகடிக்க ஆசை)
- சிறந்த தாத்தா- ரோசரி (பாக்கியலட்சுமி)
- சிறந்த மாமனார்- சுந்தர்ராஜன் (சிறகடிக்க ஆசை)
- சிறந்த மாமியார்- அனிலா ஸ்ரீகுமார் (சிறகடிக்க ஆசை)
- சிறந்த அம்மா- நிரோஷா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
- சிறந்த குடும்பம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
- சிறந்த நடிகை- கோமதி ப்ரியா (சிறகடிக்க ஆசை)
- சிறந்த நடிகர்- வெற்றி வசந்த் (சிறகடிக்க ஆசை)
- சிறந்த Budding Pair- பிரேம், வர்ஷினி (நீ நான் காதல்)
- சிறந்த அப்பா- ஸ்டாலின் முத்து (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
- Best Find Of The Year- நவின் (சின்ன மருமகள்)
- Supporting Actor, Actress- ஸ்ரீதேவா, சல்மா (சிறகடிக்க ஆசை)
- சிறந்த மருமகள்- அக்ஷயா (ஆஹா கல்யாணம்)
- ஸ்பெஷல் விருது- தீபக்
- சிறந்த சீரியல்- சிறகடிக்க ஆசை
- Child Artist- வேதா ஸ்ரீ (பொன்னி)
- சிறந்த வில்லன்- நவீன் முரளிதரன் (நீ நான் காதல்)
- சிறந்த தொகுப்பாளர்- பிரியங்கா தேஷ்பாண்டே
- Entertainer Of The Year- மாகாபா
- சிறந்த தொகுப்பாளர்- ரியோ ராஜ்
- சிறந்த இயக்குனர்- செல்லம்மா (Non Prime Time)
- ஸ்பெஷல் விருது- பாக்கியலட்சுமி (1000 எபிசோட்)
- பேரவெட் ரியாலிட்டி ஷோ- சூப்பர் சிங்கர் ஜுனியர் 9
- காமெடி ஷோ- அது இது எது பேவரெட்
- கேம் ஷோ- ஸ்டார்ட் மியூசிக்
- Trending Pair Non Fiction- பாலா, நிஷா
- சிறந்த எழுத்தாளர்- ப்ரியா தம்பி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி
- சிறந்த ஜோடி- ஸ்வாதிநாதன், லட்சுமி ப்ரியா (மகாநதி)
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        