மருமகனை நெகிழ்ந்த மாமியார்- பிரியா பவானி சங்கருக்கு கொடுத்த வார்னிங்
பிரியா பவானி சங்கர், காதல் குறித்து வீட்டில் என்ன சொன்னார் என்பதனை பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார்.
பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் பிரியா பவானி சங்கர்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கல்யாண முதல் காதல் வரை” என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் வெள்ளத்திரையில் கால்பதித்தார்.

பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஹாஸ்டல், யானை, ஓ மணப்பெண்ணே, திருச்சிற்றம்பலம், என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
திருமணம்
இந்த நிலையில் திருமணம் குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதாவது, பிரியா பவானி சங்கர் கடந்த சில ஆண்டுகளாக ராஜ்வேல் என்பவரைக் காதலித்து வருகிறார்.
இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

என் அம்மா என்ன சொன்னார் தெரியுமா?
இது குறித்து பேசிய பிரியா பவானி சங்கர், “ ராஜு ஒரு சிறந்த மனிதர். நாங்கள் இருவருமே Middle class குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு சினிமா மற்றும் மீடியா என்பது ஒரு அச்சத்தை உண்டு பண்ணும். அவரின் வீட்டிலும் அப்படி தான். ஆனால் ராஜு அப்படி இல்லை. அவர் என்னை பற்றி அவரை சார்ந்தவர்களிடம் எப்போதும் பெருமையாக தான் பேசுவார்.

என்னுடைய அம்மாவும் அவருக்கு தான் முழு ஆதரவு வழங்குவார்கள். ஒரு நாள் என்னுடைய அம்மா, “ நீ மட்டும் ராஜை விட்டு போனால் நான் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன். நான் அவருடன் சென்று அவர் வீட்டிலேயே தங்கி விடுவேன்...” எனக் கூறினார். அந்த அளவிற்கு என்னை விட ராஜுவை தான் என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும்.” என்று பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        