96 திரைப்பட குட்டி ஜானுவா இது? இப்போ த்ரிஷாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே!
96 திரைப்பட நடிகை கௌரி கிஷன் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை கௌரி கிஷன்
தமிழ் சினிமாவில் கிராமத்து பெண்ணாக 96 திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் கௌரி கிஷன். 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதே அவருக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது.
படத்தில் அவரது நடிப்பு கலவையான விடர்சனங்களை பெற்றாலும் மக்கள் மனங்களில் அவருக்கும் இந்த திரைப்படம் ஒரு அடையாளத்தை கொடுத்தது எனலாம்.
இவர் தற்போது தமிழில் மாத்திரமன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார்.
அதனை தொடர்ந்து 96 இன் தெலுங்கு ரீமேக்கான ஜானுவிலும் குட்டி ஜானுவாக மீண்டும் நடித்தார், இதனால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.
தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்தார். அதன் பின்னர் மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷுடன் கர்ணன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் குடும்ப பாங்காக கதாப்பாத்திரங்களில் நடித்த கௌரி கிஷன் சமீப காலமாக கவர்ச்சியிலும் தூள் கிளப்பி வருகின்றார்.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் கௌரி கிஷன் தற்போது ட்ரெண்டிங் உடையில் தங்க சிலை போல் தயாராகும் காணொளியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |