சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா ... ட்ரெண்டிங் உடையில் புதிய லுக்!
நடிகை ஸ்ரீலீலா ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா தமிழிலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.
'குறிச்சி மடத்த பெட்டி' பாடலுக்கு மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா போட்ட குத்தாட்டம் அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது.
இவரின் நடன திறமையால் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளதை்தை உருவாக்கிக்கொண்டார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் ஸ்ரீலீலா. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிக்கவுள்ள ‘புறநானூறு’ படத்தில் தான் ஸ்ரீலீலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
இறுதியாக நடிகை ஸ்ரீலீலா புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் வெறும் 6 நாட்களிலேயே 1000 கோடி வசூல் செய்ததுடன் தற்போது 1500 கோடியை நோக்கி வசூல் வெறியாட்டம் போட்டு வருகின்றது.
அந்த ஒரு பாடலில் நடனம் ஆடுவதற்கு ஸ்ரீலீலா 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார் என்ற தகவல் அண்மையில் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |