93 வயதில் பாட்டிக்கு வந்த டேட்டிங் ஆசை: காதலனால் வருத்தத்துடன் வீடு திரும்பியது ஏன்?
25 வருடங்கள் கழித்து டேட்டிங் சென்றிருக்கிறார் பாட்டி ஒருவர், ஆனால் அவர் வீடு திரும்பும் போது கவலையாகி போனதன் காரணத்தைக் கேட்டு நொந்துப்போயிருக்கிறார்.
பாட்டி போன டேட்டிங்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் 93 வயதான பாட்டி ஒருவர் 25 வருடங்களுக்குப் பின்னர் டேட்டிங் செல்லவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோவின் மூலம் தெரிவித்திருந்தார்.
தன்னை தனது ஆண் நண்பர் இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னை அழைத்து செல்ல வரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
பாட்டி டேட்டிங் செல்லவுள்ளதால் தன்னை மிகவும் அலங்காரம் செய்துக்கொண்டு லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுக் கொண்டு தயாராகி இருந்தார். இவர் டேட்டிங் செல்லவுள்ளதால் அவருக்கு இணையவாசிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் டேட்டிங்கிற்கு சென்ற பாட்டி திரும்பி வரும் போது கவலையுடன் வந்திருக்கிறார்.
டேட்டிங் அனுபவத்தைப் பகிர்ந்த பாட்டி
இந்நிலையில் டேட்டிங் சென்று வந்த பாட்டி வீட்டிற்கு வந்த தனது அனுபவத்தை வருத்தத்துடன் இணையவாசிகளிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தார்.
அதில் அவர் குறியிருந்ததாவது, தனது ஆண் நண்பருடன் டேட்டிங் சென்ற இடத்தில் அவர் ஜென்டில்மேன் போல தன்னிடம் நடத்துக்கொள்ளவில்லை எனவும் தனக்கான கதவைக் கூட திறந்துவிடவில்லை எனவும் கூறியிருந்தார்.
மேலும், அவருக்காக தான் அலங்காரம் செய்துக் கொண்டு சென்றதாகவும் அதை பார்த்த அவர் நான் அழகாக இருக்கிறேன் என கூறவில்லை எனவும் ஹோட்டலில் வைத்துக் கூட சர்வரிடம் மரியாதையாக நடந்துக் கொள்ள வில்லை என்றும் வருத்தமாக தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த நடவடிக்கை தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அவருக்கு நான் முத்தம் கூட கொடுக்கவில்லை என கூறியிருக்கிறார்.
இதனைப் பார்த்த இணையவாசிகள் நல்ல வேலை உங்கள் லிப்ஸ்ட்டிக் வீணாகவில்லை என பாட்டிக்கு ஆறுதலாக பேசியிருக்கிறார்கள்.