80s டிரெண்ட் புகைப்படங்கள்: காலியான பல கோடி லிட்டர் தண்ணீர்
கடந்த சில நாட்களாக 80s டிரெண்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தற்போதைய புகைப்படங்களை பதிவேற்றி 80s காலகட்டத்தில் தாங்கள் எப்படி இருப்போம் என பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வந்ததுடன் புகைப்படங்களை பகிர்ந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிரபல நடிகைகளும் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர், AI Prompt கொண்டு மிக எளிதாக உங்களது புகைப்படங்களை மாற்றியமைக்க முடியும்.

ஆனால் இதன் பின்னணியில் உள்ள வருத்தமான விடயம் என்ன தெரியுமா? இவ்வாறு செய்வதனால் கோடி லிட்டர் தண்ணீர் காலியாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த புகைப்படங்கள் அனைத்தும் Cloud எனப்படும் Data Centersகளில் மாற்றியமைக்கப்படுகின்றன, லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இதனை பயன்படுத்தும் போது GPU/CPU வேகம் அதிகரித்து சர்வர்கள் கடும் வெப்பமடைகின்றன.

இதனை குளிர்ச்சியாக Cooling Tower தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, இதற்காக பல கோடி லிட்டர் தண்ணீர் செலவாகிறது.
தற்போதைய தகவலின் படி இந்தியாவில் உள்ள AI தரவு மையங்கள் மட்டும் கடந்தாண்டில் ஏறத்தாழ 15,000 கோடி லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி உள்ளதாம்.
விளையாட்டாக செய்யப்படும் ஒரு விடயம் எவ்வளவு பெரிய ஆபத்தை உருவாக்குகிறது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம்.
