இவருக்கு 74 வயசுனு சொன்னா யாரு நம்புவா? மொடலாக அசத்தும் பாட்டி
பெயர் பெற்ற வடிவமைப்பாளர் வேரா வாங்கின் அழகிய புகைப்படங்கள் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
வடிவமைப்பாளர் வேரா வாங்
பலரும் இளமையாக இருக்க எத்தனையோ வழிமுறைகளை கையாள்கின்றனர்.
சிலர் முகம் பொலிவாக இருக்க வகை வகையான கிரீம்களைத் தடவுகின்றனர், முகத்தில் தோல் சுருக்கத்தைப் போக்க சிகிச்சை எடுக்கின்றனர்.
ஆனால், இவை அனைத்தும் தற்காலிகமானவையே, சிலருக்கு பக்கவிளைவுகளை கூட உண்டாக்கலாம்.
வெளித்தோற்ற மாற்றங்களை மறைக்க முயன்றால், அது தற்காலிகமாக இருக்கும் எனவே அகத்தில் மாற்றினால் மட்டுமே அது நிலையான இளமையைக் கொடுக்கும்.
அதை நிரூபித்து காட்டியுள்ளார் ஆடை வடிவமைப்பாளர் வேரா வாங், எப்போதும் இளமையான தோற்றம் கொண்டவர் என்று அனைவராலும் புகழப்படுபவர்.
தற்போது இவருக்கு 74 வயது ஆகிறது. ஆனால் தன் 20 வயதில் இருப்பதை போலவே இப்போதும் இருக்கிறார்.
இந்த இளமைக்கு தூக்கம் ஒரு முக்கிய காரணம் என கூறுகிறார்.
'என்னை ஒரு நல்ல ஷேப்பில் இருக்கச்செய்வது தூக்கம்தான்' என கூறியுள்ளார். அடுத்து மன அழுத்தத்தை விடுவது.
'வேலை டென்ஷனை குறைக்க அவ்வப்போது வோட்கா காக்டெய்ல் குடிக்கிறேன், இதனால் இளமை அப்படியே இருக்கிறது' என பகிர்ந்துள்ளார்.
இவரது புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |