72 வயதில் குழந்தை பெற்றெடுத்த மூதாட்டி... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தம்பதிகள்
கேரளா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் காயங்குளம் அடுத்துள்ள ராமபுரத்தில் வசித்து வருபவர் சுரேந்திரன். இவருக்கு சுதர்மா என்ற மனைவி இருக்கிறார்.(72) இவர்களுக்கு ஒரே மகன் சுரேந்தர்(35) . தற்போது துபாயில் பணியாற்றி வந்த நிலையில், உடல்நலக்குறைவினால் இறந்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த தம்பதிகள் தனது பேரக்குழந்தைகளைக் கொஞ்ச முடியாமல் வருந்தியநிலையில், சுதர்மா அவரது கணவரிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டுமெனக் கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் ஆழப்புலாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று இதற்காக முயற்சி மேற்கொண்ட போது, உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று மருத்துவர்கள் கூறியும், தம்பதிகள் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் அரசு மருத்துவர் கடந்த 32 வாரங்களுக்கு முன்னர் டெஸ்ட் டியூப் முறையில் சுதர்மாவுக்கு கருத்தரிக்கச் செய்த நிலையில், தற்போது சில தினங்களுக்கு முன்பு ஆபரேசன் மூலம் அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
குறித்த குழந்தை 1 கிலோ 100 கிராம் எடையுள்ள நிலையில், குறித்த தம்பதிகள் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.