கொட்டுற முடியெல்லாம் சேர்த்து பனை மரம் போல் வளர வேண்டுமா?அப்போ வெந்தயத்தை 7 நாள் இப்படி யூஸ் பண்ணுங்க!
தற்போது இருக்கும் இளம் வயது பிள்ளைகளுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாகி வருகின்றது. இந்த பிரச்சினை உங்களுக்கு காலப்போக்கில் மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.
அத்துடன் இதற்காக பல வழிகளில் முயற்சி செய்தும் சரி வராமல் இருக்கும்.
அப்படியானவர்கள் வீட்டில் சமையலறையிலுள்ள பொருட்களை வைத்து ரெமடிகள் செய்து பின்பற்றலாம்.
அந்த வகையில் தலைமுடி உதிர்வு பிரச்சினை இருப்பவர்கள் வெந்தயத்தை வைத்து சுமாராக 7 நாட்களுக்கு ஒரு டிப்ஸ் செய்யலாம்.
7 நாட்களுக்கு பின்னர் நிச்சயமாக உங்களின் தலைமுடி பிரச்சினைகள் சரியாகும் என நம்பலாம். இது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
வெந்தயம் எப்படி தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தும்?
இந்திய உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் வெந்தயம் எப்படி தலைமுடிக்கு பயன்படுக்கின்றது என சிந்தித்துள்ளீர்களா? தலைமுடி உதிர்வு மட்டுமல்ல தலைமுடி வளர்ச்சியையும் வெந்தயம் சரிச் செய்கின்றது.
வெந்தய விதைகள் உடலுக்குள் சென்று முடி வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை தூண்டுகின்றன. இதனால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கின்றது.
மேலும் வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து பயன்படுத்தும் போது பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.
அந்த வகையில் இத்தனை அம்சங்கள் பொருந்திய வெந்தயத்தை எப்படி தலைமுடிக்கு அப்ளை செய்யலாம் என தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.
1. முதல் நாள்
இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் ஒரு கப் அளவு வெந்தய விதைகளை எடுத்து பவுலில் போட்ட தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
2. இரண்டாம் நாள்
காலையில் எழுந்தவுடன் வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அந்த பேக்கை உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி சரியாக 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து விட்டு குளிக்கவும்.
3. மூன்றாம் நாள்
வெந்தயப் பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டு பொருளை நன்றாக கலந்து தலைமுடிக்கு அப்ளை செய்ய வேண்டும். 1 மணித்தியாலத்திற்கு பின்னர் ஷாம்பூ கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும்.
4. நான்காம் நாள்
மீண்டும் வெந்தயத்தை எடுத்து ஒரு கப்பில் ஊற வைக்க வேண்டும்.
5. ஐந்தாம் நாள்
ஊற வைத்த வெந்தயத்தை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அந்த சாற்றை எடுத்து குளித்து முடித்த பின்னர் தலைமுடியை அந்த தண்ணீரில் அலச வேண்டும்.
6. ஆறாம் நாள்
வெந்தயப் பொடி மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் கலந்து தலையில் பூசி சுமாராக 30 நிமிடங்கள் வரை வைத்து விட்டு நன்றாக அலசிக் கொள்ளவும். 7. மீண்டும் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட முறைப்படி சுமாராக 3 - 4 வாரங்களுக்கு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை விரைவில் பார்க்கலாம். அத்துடன் தலைமுடி வளர்ச்சியும் அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |