நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் செய்யும் அற்புதம்: ஒரே ஒரு ஸ்பூன் போதும்
வெந்தயத்தில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற ஆண்டிகார்சினோஜெனிக் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளை கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.
பெரும்பாலான இந்திய சமையலறைகளில் பொதுவாகக் காணப்படும் வெந்தயம், மருத்துவ குணங்களுக்காகவும் அறியப்படுகிறது. மஞ்சள் நிற வெந்தய விதைகள் நீரிழிவு, செரிமான கோளாறுகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் பண்புகள் நிறைந்தவை.
வெந்தயத்தில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற ஆண்டிகார்சினோஜெனிக் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளை கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.
ஆனால் வெந்தயம் உட்கொள்வதற்கு சிறந்த நேரம் எது?
சில அறிக்கைகள் ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகளை காலையில் முதலில் உட்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றன, ஆனால் வெந்தயத்தை வெறுமனே உட்கொள்வது உங்களுக்கு கடினமாக இருந்தால் அதை உங்கள் காய்கறி, பருப்பு அல்லது பிற உணவு தயாரிப்புகளிலும் சேர்த்து சாப்பிடலாம்.
வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச இதழில் 2015 இல் வெளியிடப்பட்ட ஆய்வில், தினமும் 10 கிராம் வெந்தய விதைகளை சூடான நீரில் ஊறவைப்பது டைப் -2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் நீர், இரத்த சர்க்கரையை குறைக்கும் திறன் கொண்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெந்தயம் ஊறவைத்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
வெந்தய நீர் குடிக்க, முதலில் நீங்கள் இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இரவு முழுவதும் வெந்தயம் நன்றாக ஊறிய பின்னர், தண்ணீர் இளம் மஞ்சள் நிறமாக மாறியிருக்கும்.
இதனை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்துவிட்டு, அந்த ஊறிய வெந்தயையும் சாப்பிடலாம்.
- உடலில் அமிலத்தன்மைகளை சரிசெய்ய உதவுகிறது.
- நெஞ்செரிச்சலை சரி செய்கிறது.
- செரிமானத்திற்கு உதவுகிறது.
- ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதன் மூலம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
- உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியடையச் செய்கிறது.
- மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது.
- பக்கவாதம், அமிலசுரப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
- பெண்களுக்கு மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது