சிறுநீரக பிரச்சனை இருந்தால் இந்த காய்கறிகளை மறந்தும் சாப்பிடாதீங்க.. பக்க விளைவு பயங்கரமாக இருக்குமாம்!
பொதுவாக அதிகமான யூரியா அளவு அல்லது சிறுநீரக பிரச்சனைகள் வரும் போது உணவில் சில கட்டுபாடுகள் செய்வது மிக அவசியமாகும்.
குறிப்பாக காய்கறிகள் எடுத்து கொள்வதில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும்.
பொட்டாசியம் அதிகரிப்பு சிறுநீரகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.
அந்த வகையில், யூரியா அளவு அதிகமாக உள்ள நபர்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய காய்கறிகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
யூரியா அளவு அதிகமாகவுள்ளவர்கள் தொட கூடாத உணவுகள்
1. தக்காளியில் அதிகமான பொட்டாசியம் இருக்கின்றது. இது சிறுநீரகத்தில் வடிகட்டுவதற்கான திறனை பாதிக்கலாம். ஆகவே உணவில் அதிகமான தக்காளி சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
2. பொதுவாக காளான்கள் மண்ணிலிருந்து தான் பயிர் செய்து எடுப்பார்கள். இவ்வாறு விளையும் காளான்கள் இயற்கையாவே பியூரின்கள் நிறைந்தவையாக இருக்கும். இது அதிகமாக எடுத்து கொண்டால் உடலில் யூரிக் அமிலம் அதிகமாகி, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்கும். எனவே காளான்கள் எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3. கீரைகள் இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனின் கீரையில் பொட்டாசியம் உட்பட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வரிசையாக இருக்கின்றன. இது சிறுநீரகங்களை பலவீனமாக்கும். ஆகவே கீரைகள் சாப்பிடுவதில் அதிகமான கவனம் செலுத்துங்கள்.
4. அவகோடா என பார்க்கும் போது அதிகமான சத்துக்கள் இதில் இருக்கின்றது. இதிலிருக்கும் கிரீம் போன்ற அமைப்பு சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சவாலாக இருக்கலாம். ஏனெனின் இதில் அதிகமான பொட்டாசியம் இருக்கின்றது. தினமும் இல்லாமல் அவ்வப்போது எடுத்து கொண்டால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
5. இந்திய உணவுகளில் இந்த காய்கறி இல்லாமல் இருக்காது. ஆனால் சிறுநீர் பிரச்சினையுள்ளவர்கள் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உருளைகிழங்கை சமைத்து சாப்பிடும் போது தோல் நீக்கி வேண்டும். அப்போது பொட்டாசியத்தின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |