4 மாதங்கள் வரை தக்காளி கெட்டுப்போகாமல் இருக்க... இது தான் டிப்ஸ்
தங்கம் விலை எப்படி தினமும் ஏறிக்கொண்டே போகிறதோ அந்த அளவுக்கு இப்போ தக்காளி விலை கிடுகிடுவென ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால், இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர்.
இப்படி விலை கொடுத்து தக்காளியை வாங்கிட்டு வந்து வீட்டில் வைத்தால் இரண்டு நாட்கள் கூட தாங்காமல் அழுகி விடுகிறது. அதை தூக்கி போடக்கூட மனசு வராது.
கவலை விடுங்கள்... தக்காளி அழுகாமல் பாதுகாக்க சில டிப்ஸ் இருக்கு... அதை பார்க்கலாம் வாங்க...
1. வாங்கி வந்த தக்காளிகளை தினமும் பாருங்க... அது ஏதாவது ஒரு தக்காளி அழுகி கிடந்தால் உடனே தூக்கி போட்டுவிடுங்க. இல்லையென்றால் எல்லா தக்காளியும் அழுகிவிடும்.
2. தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க. எப்போதுமே தக்காளியை அறை வெப்பநிலையில்தான் வைக்க வேண்டும். அதுதான் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
3. முதலில் நன்கு பழுத்த தக்காளியை பயன்படுத்துங்கள். அப்படி பழுத்த தக்காளி அதிகமாக இருந்தால் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்.
4. இன்னொரு சூப்பர் ஐடியா இருக்கு.. தக்காளிகளை நன்றாக வெட்டி, காற்று போக டப்பாவில் போட்டு ஃபிரீசரில் வைத்து விடுங்கள்.
இப்படி வைத்தால், 3 முதல் 4 மாதங்கள் வரை தக்காளி கெட்டுப்போகாமல் இருக்கும். எப்போதெல்லாம் தக்காளி விலை அதிகமாக உள்ளதோ அப்போ மட்டும் இப்படி செய்தால் போதும்.
5. நீண்ட நாட்களுக்கு தக்காளி வர வேண்டும் என்றால், பழுக்காத தக்காளியாக பார்த்து வாங்குங்கள். பழுக்க பழுக்க ஒவ்வொன்றாக எடுத்து பயன்படுத்துங்கள். ஈரப்பதம் இல்லாத இடத்தில் தக்காளியை வையுங்கள். இல்லையென்றால் தக்காளி கெட்டு போய்விடும்.
6. தக்காளி கெட்டுப்போகாமல் இருக்க தக்காளியை தலைகீழாக வையுங்கள். சூரிய வெளிச்சத்திலிருந்து விலக்கி வைப்பது தக்காளியை நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |