தீர்க்கதரிசிகளின் அடுத்தடுத்த கணிப்புகள்: 2025 ஆம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸின் 5 அழிவுகள்
2025 ஆம் ஆண்டு குறித்து நோஸ்ட்ராடாமஸ் சில கணிப்புகளை குறித்துள்ளார். இவை ஒவ்வொன்றையும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நோஸ்ட்ராடாமஸ்
2025 ஆம் ஆண்டிற்கான தனது கணிப்புகளில் இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து நோஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார். 16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடரும் தீர்க்கதரிசியுமான நோஸ்ட்ராடாமஸ், தனது மாய கணிப்புகளுக்குப் பெயர் பெற்றவர்.
அவரது பல கணிப்புகள் வரலாற்று நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி, அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் படுகொலை, ராஜீவ் காந்தியின் படுகொலை போன்ற பல கணிப்புகளை நோஸ்ட்ராடாமஸ் முன்பே கணித்திருந்தார்.
1. நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளில் ஒன்று பூமி ஒரு பெரிய சிறுகோளுடன் மோதுவதற்கு அருகில் வரக்கூடும். அது ஈர்ப்பு விசை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
2. இரண்டாம் கணிப்பு உலகளாவிய உள்கட்டமைப்பு மீதான சைபர் தாக்குதல் சாத்தியமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். AI மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் தவறான தகவல்களையும் அரசியல் கையாளுதல்களையும் அதிகரிக்க வழிவகுக்கும். சைபர் போர் மற்றும் தரவு பாதுகாப்பு சிக்கல்கள் மிகவும் தீவிரமடையக்கூடும்.
3. மூன்றாம் கணிப்பு புத்தாண்டில் பல மருத்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் நோய்களுக்கான பயனுள்ள சிகிச்சைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் புற்றுநோய் மற்றும் பிற நாள்பட்ட நோய்களுக்கு மேம்பட்ட சிகிச்சைகள் உருவாக்கப்படலாம்.
4. நான்காம் கணிப்பு உலகில் நடக்கும் அனைத்துப் போர்களிலும், ரஷ்யா-உக்ரைன் போர் மட்டுமே முடிவுக்கு வரும் காரணம் இரு தரப்பிலும் உள்ள படைகள் சோர்வடைந்துவிட்டதால், இப்போது அந்த நாடுகளிடம் வீரர்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூட பணம் இல்லாதது தான்.
5. ஐந்தாம் கணிப்பு 2025 ஆம் ஆண்டில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத் தீ போன்ற பேரழிவுகள் அதிகரிக்கும். இதுபோன்ற பல கணிப்புக்கள் உண்மையில் நடந்துள்ளதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |