இனிமேல் நரை முடியை கருப்பாக்க டை எதற்கு? இந்த 5 பொருள் இருந்தா போதும்
இன்றைய நவீன காலத்தில், வெள்ளை முடி என்பது ஒரு சாதாரண பிரச்சனையாகிவிட்டது. இதைச் சமாளிக்க, மக்கள் பெரும்பாலும் விலையுயர்ந்த சிகிச்சைகள், முடி நிறம் மற்றும் ரசாயனப் பொருட்களை நாடுகிறார்கள்.
ஆனால் இந்தப் பிரச்சனையை இயற்கையான வழியிலும் தீர்க்க முடியும். இந்த பொருட்கள் மூலம் நமது தலைமுடி ஆரோ்கியமாக இருப்பதுடன் தலைமுடியின் நிறமும் பார்க்க இயற்கையாக இருக்கும்.
அந்த வகையில் முடியை கருப்பாக்க டை பயன்படுத்தாமல் ஐந்து இயற்கை பொருட்களை வைத்து நரைமுடியை கருப்பாக்கும் முறை பற்றி பார்க்கலாம்.

நரை முடியை கருப்பாக்கும் முறை
| ஸ்ட்ராங் பிளாக் டீ | 1.நரை முடியை கருப்பாக்க ஸ்ட்ராங் பிளாக் டீ அல்லது காஃபி உதவும். இவை தலையில் உள்ள வெள்ளை முடிக்கு தற்காலிகமாக அடர் சாம்பல் நிறத்தை கொடுக்கும். இவற்றில் ஒன்றை தலைமடியில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து பின் தலையை அலசி விடவும். இதனுடன் நெல்லிக்காய் பொடியுடன் ஹென்னா தடவுவது கூந்தலின் வெளிப்புற அடுக்கில் நிறத்தைப்கொடுக்கும். |
| ஹேர் ஸ்டைல் | 2.நாம் வெளியில் செல்லும் போது செய்யும் ஹேர் ஸ்டைல் கூட நம் தலையில் இருக்கும் நரைமுடியை நன்கு வெளியே தெரியும்படி செய்ய கூடும். இதற்கு நாங்கள் சொல்லும் ஹேர் ஸ்டைல் செய்தால் தெரியாது. இதற்கு மெஸ்ஸி பன்ஸ், ப்ரெயிட்ஸ் அல்லது டீப் சைட் பார்ட்ஸ் போன்ற ஹேர் ஸ்டைல்களை தேர்வு செய்யலாம். இவை நரை முடியில் பிறரின் கவனம் செல்வதற்கு பதில் நீங்கள் செய்யும் ஹேர் ஸ்டைல் மீதான அவர்களின் கவனத்தை ஈர்க்கும். |
| ரூட் டச்-அப் பவுடர் | இயற்கையான ரூட் டச்-அப் பவுடர்கள் அல்லது ஸ்ப்ரேக்களை பயன்படுத்துவது நரை முடியை மறைப்பதற்கான விரைவான தீர்வை உங்களுக்கு வழங்கும். ரூட் டச்-அப் பவுடர் எனபது தற்காலிக ஹேர் கன்சீலர் ஆகும். இவை பல நிறுவனங்கள் மூலம் நச்சுத்தன்மை அற்றதாக தற்போது சந்தைக்கு வரப்படுகின்றது. இந்த தயாரிப்புகள் முடி நிறத்துடன் நன்றாக கலக்கின்றன. மேலும் இவற்றை எளிதில் வாஷ் செய்யலாம். பலருக்கும் இவை ஒரு சரியான தற்காலிக தீர்வை கொடுக்கும். |
| எலுமிச்சை | உங்கள் நரை முடியை லேசான நிறத்துடன் கலப்பதன் மூலம் நரைமுடியை மறைக்கலாம். உங்கள் நரை முடியின் மீது எலுமிச்சை சாற்றை தடவி, வெயிலில் உலர விடுங்கள். இது கூடுதல் இயற்கையான தோற்றத்தை கொடுக்கும். ஆனால் இதை நேரடியாக முடியில் தடவாமல் அதை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தலாம். |
| ஆர்கான் எண்ணெய் | இயற்கையாகவே கூந்தலுக்கு பளபளப்பை சேர்க்கும் ஆர்கான் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் மற்றும் ஸ்மூத்தான கண்டிஷனர் போன்ற தயாரிப்புகள் முடிக்கு ஒரு நல்ல ஆரோக்கிய நிறத்தை கொடுக்கும். இதனால் கூந்தலுக்கு அதிக பளபளப்பு கிடைக்கும். நரை முடிக்கும், கருமையான கூந்தலுக்கும் இடையிலான வேறுபாட்டை குறைத்து காண்பிக்க இந்த ட்ரிக் சிறப்பாக செயல்படுகிறது. |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |