சுளுக்கை தலைதெறிக்க ஓட விடும் பாட்டி வைத்தியம்! ஒரே மசாஜ் தான்
பொதுவாக 40 வயதை கடந்த ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தசைப்பகுதிகளில் சுளுக்கு பிரச்சினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அவர்கள் குனிந்து நிமிந்து ஏதாவது செய்தாலே இது போன்ற பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வார்கள். இதற்காக பலர் ஆங்கில மருத்துவத்தையே அதிகம் நாடுவார்கள். ஆனால் அவையெல்லாம் நீண்ட நாள் நிவாரணம் தராது.
இதனால் மீண்டும் அவர்களிடமே செல்ல வேண்டிய நிலை இருக்கும். அந்தவகையில் தசைச் சுளுக்கை விரட்டி அடிக்கும் பழமை வாய்ந்த பாட்டி வைத்தியம் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
சுளுக்கு பிரச்சினையை வேருடன் எடுக்கும் பாட்டி வைத்தியம்
1. கற்றாழை
சுளுக்கு பிரச்சினையுள்ள இடங்களில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி தினமும் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் சுளுக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறலாம்.
2. கிராம்பு எண்ணெய்
இந்த கிராம்பு எண்ணெய் தசை வலி, தசை பிடிப்பு, சுளுக்கு போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வலி இருக்கும் இடங்களில் நாளொன்றுக்கு 3 அல்லது 4 தடவைகள் தடவி வந்தால் சுளுக்கு பிரச்சினையிலிருந்து விடை பெறலாம்.
3. வெங்காயம்
வெங்காயம் சமைப்பதற்கு மட்டுமல்ல கணுக்கால் மற்றும் பாதங்களில் எற்படும் சுளுக்கு தசைபிரல்வு போன்ற பிரச்சினைகளை சுகப்படுத்தி விடும். வெங்காயத்தை சின்னத்தூண்டுகளாக நறுக்கி காட்டன் துணியால் சுற்றி, சுளுக்கு உள்ள இடத்தில் கட்டி விட வேண்டும்.
இவ்வாறு செய்தால் சுளுக்கு இருந்த இடம் தெரியாமல் மறையும். மேலும் இந்த முறையை தொடர்ந்து செய்ய வேண்டும்.
4. ஆலிவ் ஆயில்
பொதுவாக நாம் பயன்படுத்தும் ஆலிவ் ஆயிலில் ஆன்டி- இக்ப்ளமேட்டரி எனப்படும் பண்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் தசையில் வலி ஏற்பட்டால் ஆலிவ் ஆயிலை கொண்டு சூடு வரும் வரை தடவி மசாஜ் செய்தால் நாளடைவில் இது போன்ற வறுத்தங்கள் மறையும்.
5. விளக்கெண்ணெய்
தசை பிடிப்பு, வீக்கம் சுளுக்கு உள்ளவர்கள் காட்டன் துணியை விளக்கெண்ணெய்யில் நனைத்து பிரச்சினையுள்ள இடத்தில் இருக்கமாக கட்டி விட வேண்டும்.
சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் வெந்நீரால் அதனை துடைக்க வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும். தசை பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.