உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? ஆரோக்கியமான வழிமுறைகள் இதோ
பொதுவாக அன்றாட வேலைகளுக்கு நடுவே சில ஆரோக்கியமான பழக்கங்களையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.
நாம் கடைபிடிக்கும் ஆரோக்கிய பழக்கங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு இதய நலனையும் மேம்படுத்தும் வகையில் இருத்தல் வேண்டும்.
வீடுகளில் திருவிழா, பண்டிகை அல்லது விடுமுறை காலங்கள் வந்தாலே ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் இன்னொரு பக்கம் உடல்நலக் குறைவுகள் ஏற்படவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அளவிற்கு அதிகமாக எண்ணெய் தன்மை கொண்ட உணவுகளை எடுத்து கொள்ளும் போது உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றல் அவசியம்.
இவற்றை தவறும் பட்சத்தில் இதய நலனில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். டயட், உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை பழக்கங்களால் நம்முடைய கொலஸ்ட்ரால் அளவு 15 முதல் 20 சதவிகிதம் வரை பாதிக்கப்படுகிறது.
மாறாக மீதமாக உள்ள 85 சதவிகித கொலஸ்ரால் கல்லீரலில் உற்பத்தியாகிறது. இது மனிதர்களின் மரபணுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இப்படியான ஒரு நிலையில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் இதய நலனையும் மேம்படுத்தவும் என்னென்ன விடயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
கொலஸ்ட்ராலை குறைக்கும் டிப்ஸ்
1. இதயத்தை பாதுகாக்கும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் புரொட்டீன் ஆகியவற்றை டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.
2. நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
3. உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்க வேண்டுமெனின் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உதாரணமாக மீன், சால்மன், ஆளி விதைகள், வால்நட் ஆகியவற்றை கூறலாம்.
4. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது கடுமையாக உடற்பயிற்சி ஈடுபடல் அவசியம்.
5. கொலஸ்ராலை குறைக்க வேண்டும் என்றால் சரிவிகித டயட்டை பின்பற்ற வேண்டும்.
6. குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் கட்டுபாட்டிற்குள் வைத்து கொள்வது அவசியம். இது கொலஸ்ட்ரால் அளவு குறைப்பதற்கு காரணமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |